twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வசூலை வாரிக் குவிக்கும் பிரம்மாஸ்திரம்… பாக்ஸ் ஆபிஸில் 250 கோடியை தொடும் ரன்பீர் கபூர்

    |

    மும்பை: ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்துள்ள பிரம்மாஸ்திரம் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.

    அயன் முகர்ஜி இயக்கியுள்ள பிரம்மாஸ்திரம் திரைப்படம் ஃபேன்டசி அட்வென்சர் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

    பிரம்மாஸ்திரம் படத்துக்கு எதிராக பாய்காட் செய்யப்பட்ட நிலையில், வசூலில் சாதனை படைத்து வருகிறது.

    டல் அடிக்கும் பிரம்மாஸ்திரம் பாக்ஸ் ஆபிஸ்.. 400 கோடியாவது வருமா? கலக்கத்தில் படக்குழு! டல் அடிக்கும் பிரம்மாஸ்திரம் பாக்ஸ் ஆபிஸ்.. 400 கோடியாவது வருமா? கலக்கத்தில் படக்குழு!

    400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான பிரம்மாஸ்திரம்

    400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான பிரம்மாஸ்திரம்

    ரன்பீர் கபூர், ஆலியா பாட், அமிதாப் பச்சன், நாகர்ஜுனா நடித்துள்ள 'பிரம்மாஸ்திரம்' திரைப்படம், கடந்த வாரம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அயன் முகர்ஜி இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. மேலும், 3 பாகங்களாக தயாராகியுள்ள இந்தப் படத்தின் அடுத்த இரண்டு பாகங்கள், 2023, 2024 ஆகிய வருடங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேன்டசி அட்வென்சர் ஜானரில் வெளியான 'பிரம்மாஸ்திரம்' ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    பாய்காட் பிரச்சாரத்தைக் கடந்து பிரம்மாஸ்திரம் பெற்ற வெற்றி

    பாய்காட் பிரச்சாரத்தைக் கடந்து பிரம்மாஸ்திரம் பெற்ற வெற்றி

    கடந்த சில மாதங்களாகவே இந்தியில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் நெட்டிசன்களால் பாய்காட் செய்யப்படுகின்றன. அமீர்கானின் லால் சிங் சந்தா, அக்சய் குமாரின் பிருத்விராஜ், ரக்‌ஷாபந்தன் படங்கள் பாய்காட் காரணமாக மரண அடி வாங்கின. அதேபோல், பிரம்மாஸ்திரம் படத்துக்கு எதிராகவும், ரன்பீர் கபூருக்கு எதிராகவும் நெட்டிசன்கள் பாய்காட் செய்யத் தொடங்கினர். அதனால், பிரம்மாஸ்திரம் படத்தின் வசூலும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதையெல்லாம் கடந்து வசூலில் சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    இரண்டே நாளில் 100 கோடியை கடந்த பிரம்மாஸ்திரம்

    இரண்டே நாளில் 100 கோடியை கடந்த பிரம்மாஸ்திரம்

    பிரம்மாஸ்திரம் திரைப்படத்துக்கு எதிராக தொடர்ச்சியாக பாய்காட் செய்யப்பட்ட நிலையில், கடந்த வாரம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பான் இந்தியா படமாக இந்தி, தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான இப்படத்திற்கு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், முதல் நாளில் 75 கோடியும், இரண்டாம் நாளில் 150 கோடி வசூலையும் எளிதாக கடந்தது. உலகம் முழுவதும் இது நல்ல வசூலாக இருந்தாலும், பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவதாக தகவல் வெளியானது.

    திரையரங்குகளில் 250 கோடி, ஓடிடி உரிமை 150 கோடி?

    திரையரங்குகளில் 250 கோடி, ஓடிடி உரிமை 150 கோடி?

    பிரம்மாஸ்திரம் திரைப்படம் முதல் வாரம் முடிவில் 225 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது 250 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரன்பீர் கபூருக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்த படமாக பிரம்மாஸ்திரம் அமைந்துள்ளது. இதனிடையே, ஓடிடி உரிமையிலும் இந்தப் படம் சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, பிரம்மாஸ்திரம் ஓடிடி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் 150 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    English summary
    Ranbir Kapoor and Alia Bhatt starrer Brahmastra hit the theaters last week. This film has overcome the boycott campaign and has been well received by the fans. At the end of the first week, the movie Brahmastra collected 250 crores
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X