செல்ஃபி எடுத்த ரசிகரின் செல்போனை வீசிய ரன்பீர் கபூர்... இது ரொம்ப சீப்பான நெகட்டிவ் மார்க்கெட்டிங்

மும்பை: பாலிவுட் முன்னணி நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான பிரம்மாஸ்திரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து அனிமல் உள்ளிட்ட மேலும் சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் செல்ஃபி எடுக்க சென்ற ரசிகரின் செல்போனை ரன்பீர் கபூர் பிடுங்கி வீசி எறிந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது அதற்கான காரணம் என்னவென்பது தெரியவந்துள்ளது.

 பிரம்மாஸ்திரா நாயகன் ரன்பீர் கபூர்

பிரம்மாஸ்திரா நாயகன் ரன்பீர் கபூர்

2007ம் ஆண்டு வெளியான சாவரியா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ரன்பீர் கபூர், தற்போது பாலிவுட்டின் டாப் ஹீரோவாக அசத்தி வருகிறார். ராக்ஸ்டார், பேஷ்ராம் சஞ்சு, ஷாம்ஷேரா போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு ஆலியா பட்டை திருமணம் செய்துகொண்டார் ரன்பீர் கபூர். அதன் தொடர்ச்சியாக இருவரும் இணைந்து நடித்த பிரம்மாஸ்திரம் படமும் சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து அனிமல், தூ ஜூதி மெயின் மக்கார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரன்பீர் கபூர்.

 செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர்

செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர்

இந்நிலையில், இருதினங்களுக்கு முன்னர் வெளியான ரன்பீர் கபூரின் வீடியோ ஒன்று வைரலானது. அதில் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை ரன்பீர் கபூர் தூக்கி எறிகிறார். இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் காட்டுத்தீயாய் பரவியது. ரசிகர் ஒருவர் ரன்பீர் கபூருக்கு அருகில் நின்றுகொண்டு செல்ஃபி எடுக்க முயல்கிறார். ஆரம்பத்தில் செல்ஃபி எடுக்க ரன்பீர் கபூரும் ரெடியாக காத்திருக்கிறார். அப்போது இரண்டு, மூன்று முறை க்ளிக் செய்தும் செல்ஃபி எடுக்க முடியாமல் அந்த இளைஞர் தடுமாறுகிறார். அப்போது ரசிகரின் செல்ஃபோனை வாங்கும் ரன்பீர் கபூர், அதை அப்படியே தூக்கி எறிவதாக வீடியோவில் இருந்தது.

 இதுதான் உண்மையா?

இதுதான் உண்மையா?

ரன்பீர் கபூரின் வீடியோ வைரலாகி வந்ததோடு 'ஆங்கிரி ரன்பீர் கபூர்' - #angryranbirkapoor என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டானது. மேலும், சிலர் ரன்பீரின் இந்த மோசமான நடவடிக்கை அவர் மீதான மரியாதையை சீர்குலைத்துவிட்டது, ரன்பீர் திமிர் பிடித்தவர் என்று கருத்துகள் தெரிவித்து வந்தனர். அதேபோல் மற்றொரு தரப்பினர் இது விளம்பர யுக்தி என்றும், ஏதாவது செல்ஃபோன் விளம்பரத்திற்காக இப்படியான வீடியோ எடுத்திருக்கலாம் எனவும் கூறி வந்தனர். இறுதியாக இதுதான் தற்போது உண்மையென தெரியவந்துள்ளது.

நெகட்டிவான மார்க்கெட்டிங்

அந்த ரசிகருக்கு புது மொபைல் உறுதி எனவும் நெட்டிசன்கள் கூறி வந்தனர். இது எல்லாம் உண்மை என்பது போல தற்போது ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பிரபல செல்போன் நிறுவனமான ஓப்போ வெளியிட்டுள்ளது. OPPO RENO 8T என்ற புதிய மாடல் மொபைலின் விளம்பரம் தான் இது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அந்த வீடியோவையும் முழுமையாக வெளியிட்டுள்ளது. அதில் செல்போனை தூக்கி வீசும் ரன்பீர் கபூர், அதன்பின் புதிய OPPO RENO 8T மொபைலை அந்த ரசிகருக்கு கொடுக்கிறார். பின்னர் இருவரும் சிரித்துக்கொண்டே செல்ஃபி எடுப்பதாக முடிகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இப்படி சீப்பான நெகட்டிவ் மார்க்கெட்டிங் செய்யக்கூடாது என ரன்பீர் கபூரை மீண்டும் டிவிட்டரில் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X