சிவகுமார் மோடுக்கு மாறிய ரன்பீர் கபூர்.. செல்ஃபி எடுத்த ரசிகரின் போனை தூக்கி எப்படி வீசுறாரு பாருங்க
மும்பை: இளம் ரசிகர் ஒருவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், பின்னர் அந்த செல்போனை வாங்கி தூக்கி எறிந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
#angryranbirkapoor என்கிற ஹாஷ்டேகை பாலிவுட் ரசிகர்கள் டிரெண்ட் செய்து நடிகர் ரன்பீர் கபூரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
செல்ஃபி எடுத்த ரசிகரின் செல்போனை பழம்பெரும் நடிகர் சிவகுமார் தூக்கி எறிந்தது போலவே இந்த சம்பவமும் நடந்துள்ளதாக நெட்டிசன்கள் கம்பேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

சிரித்துக் கொண்டே செல்ஃபி
கடந்த ஆண்டு பிரம்மாஸ்திரம் படத்தின் மூலம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஆடிய நடிகர் ரன்பீர் கபூர் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க சிரித்துக் கொண்டே அதற்கு போஸ் கொடுத்தார். ஆனால், கொஞ்ச நேரத்தில் ரசிகரின் செயலால் கடுப்பான நடிகை ஆலியா பட்டின் கணவர் செய்த செயல் சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.

செல்போன் போச்சு
ஒருமுறை செல்ஃபி எடுத்து விட்டு அந்த இளைஞர் விட்டு இருந்தால் ரன்பீர் கபூரும் சிரித்த முகத்திரையுடன் அங்கிருந்து விலகிச் சென்றிருப்பார். ஆனால், அந்த இளம் ரசிகர் சார், இன்னும் ஒரே ஒரு போட்டோ என மறுபடி மறுபடி பதற்றத்தில் சரியாக எடுக்காமல் போன நிலையில், கடுப்பான ரன்பீர் கபூர் அந்த இளைஞரின் செல்போனை வாங்கி தூக்கி எறியும் வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கி உள்ளன.
ஆங்கிரி ரன்பீர் கபூர்
தனது ரசிகரிடம் பாலிவுட்டின் இளம் நடிகர் இப்படியா நடந்து கொள்வார் என கடுப்பான ரசிகர்கள் #angryranbirkapoor என்கிற ஹாஷ்டேக்கை பதிவிட்டு ரன்பீர் கபூரை வெளுத்து வாங்கி வருகின்றனர். கொஞ்சம் கூட ரன்பீர் கபூருக்கு சில நொடிகள் கூட பொறுமை இல்லையே என்றும், அந்த ரசிகர் அப்படி நேரம் கடத்தியது தவறு என்றும் கமெண்ட்டுகள் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் குவிந்து வருகின்றன.

சிவகுமார் மோடுக்கு
பழம்பெரும் நடிகரும் நடிகர் சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் முன்னதாக இதே போல செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட காட்சிகள் சோஷியல் மீடியாவில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், இளம் நடிகர் ஒருவரே இப்படி செய்து விட்டாரே என பலரும் ரன்பீர் கபூரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

பிரம்மாஸ்திரா
கடந்த ஆண்டு ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்த பிரம்மாஸ்திரா திரைப்படம் 400 கோடிக்கும் அதிகமாக பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்தது. ஆனால், அந்த படத்தின் பட்ஜெட்டே 400 கோடிக்கும் மேல் என்கிற நிலையில், அது பெரிய வெற்றியாக பாலிவுட் ரசிகர்களாலே கருதப்படவில்லை. பிரம்மாஸ்திரா 2 படமும் உருவாகுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஸ்ரத்தா கபூருடன் நெருக்கம்
சமீபத்தில் வெளியான ரன்பீர் கபூரின் புதிய படத்தின் டீசரில் நடிகை ஸ்ரத்தா கபூர் உடன் பீச்சில் படு நெருக்கமாக வெறும் உள்ளாடையுடன் ரன்பீர் கபூர் நின்ற காட்சிகள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகின. இந்நிலையில், இப்படியொரு சிக்கலான வீடியோவால் பெரியளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார் நடிகர் ரன்பீர் கபூர்.

ரசிகர்கள் கண்டனம்
அந்த இளம் ரசிகர் எந்தளவுக்கு எக்ஸைட் ஆகி செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் போய் அவரது செல்போனை பிடுங்கி தூக்கி எறிவது கொஞ்சம் கூட மனிதாபிமானமற்ற செயல். பிடிக்கவில்லை என்றால் முதலிலேயே வேண்டாம் என சொல்லி விலகி சென்றிருக்கலாம் என ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











