»   »  ரன்பீர்-கத்ரீனா பிரேக்-அப்க்கு அலியா பட் தான் காரணமாமே!

ரன்பீர்-கத்ரீனா பிரேக்-அப்க்கு அலியா பட் தான் காரணமாமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரன்பீர் கபூர் - கத்ரீனா கைப் இடையிலான காதல் முறிவிற்கு இளம் நடிகை அலியா பட் தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பாலிவுட்டின் குறிப்பிடத் தகுந்த காதல் ஜோடிகளில் ரன்பீர் - கத்ரீனாவிற்கு ஒரு தனியிடம் உண்டு. 2009 ம் ஆண்டிலிருந்து காதலித்து வரும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

Ranbir Kapoor - Katrina Kaif Break-Up Reason

இந்நிலையில் ரன்பீர் - கத்ரீனா இருவரும் பிரிந்து விட்டதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இவர்கள் இருவரின் பிரிவிற்கு முதலில் சல்மான், தீபிகா காரணம் என்று கூறினர்.

சல்மான்கானின் முன்னாள் காதலி கத்ரீனா, ரன்பீரின் முன்னாள் காதலி தீபிகா படுகோன் என்பதை கட்டாயம் இங்கே நாம் குறிப்பிட வேண்டும்.

இந்நிலையில் இருவரின் காதல் முறிவிற்கு பாலிவுட்டின் இளம் நடிகைகளில் ஒருவரான அலியா பட் தான் காரணம் என்று புதிதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இருவரின் காதல் முறிவை உறுதிபடுத்துவது போன்று ரன்பீர் கபூர் ஒரு செயலைச் செய்திருக்கிறார். அதாவது மும்பையில் உள்ள தனது அபார்ட்மெண்ட் ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் விருந்து ஒன்றை அவர் கொடுத்திருக்கிறார்.

இந்த விழாவிற்கு நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்த ரன்பீர், கத்ரீனாவை தப்பித் தவறியும் கூட அழைக்கவில்லையாம். இதன் மூலம் இருவரின் காதலும் கிட்டதட்ட முடிவிற்கே வந்து விட்டதாக பலரும் ஆரூடம் கூறி வருகின்றனர்.

மற்றொருபுறம் இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க பலரும் முயன்று வருகின்றனர். ஆனால் இருவரும் தங்கள் காதல் முறிவைப் பற்றி அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Bollywood Young Actress Alia Bhatt being the reason for, Ranbir Kapoor - Katrina Kaif Love Break-Up.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil