»   »  கத்ரீனா கைஃப், ரன்பிர் கபூர் காதல் முறிந்தது: காரணம் தீபிகா படுகோனே?

கத்ரீனா கைஃப், ரன்பிர் கபூர் காதல் முறிந்தது: காரணம் தீபிகா படுகோனே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபும், அவரது காதலரும், நடிகருமான ரன்பிர் கபூரும் பிரிந்துவிட்டார்களாம்.

சல்மான் கான் காதலியாக இருந்த கத்ரீனா கைஃப் அவரை விட்டு விலகி பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரை காதலித்து வந்தார். அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். மும்பையில் தனியாக வீடு எடுத்து லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

ரன்பிர் கபூரும், அவரது முன்னாள் காதலியுமான தீபிகா படுகோனேவும் சேர்ந்து தமாஷா என்ற படத்தில் அண்மையில் நடித்தனர். அப்போது அவர்கள் படப்பிடிப்பில் ஓவர் நெருக்கமாக இருந்தது கத்ரீனாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

ரன்பிர் கபூர்

ரன்பிர் கபூர்

படப்பிடிப்பின்போது தீபிகாவுடன் ஒட்டி உறவாடிய ரன்பிர் படத்தை விளம்பரம் செய்கையிலும் அவருடனேயே நேரத்தை செலவிட்டுள்ளார். இதனால் கத்ரீனாவின் கோபம் மேலும் அதிகரித்தது.

காதல் முறிவு

காதல் முறிவு

தீபிகா விஷயத்தில் கோபத்தில் இருந்த கத்ரீனா, ரன்பிர் கபூரின் காதல் முறிந்துள்ளது. ரன்பிர் வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

திருமணம்

திருமணம்

ரன்பிர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்பார் என்று கத்ரீனா ஆவலுடன் இருந்தார். ஆனால் அவரோ தனது சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி திருமணத்தின் மீது ஈடுபாடு இல்லாமல் உள்ளார். இதுவும் கத்ரீனாவை எரிச்சல் அடைய வைத்த விஷயங்களில் ஒன்று.

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்

தீபிகா நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்தாலும், ரன்பிர் கபூர் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ரன்வீர் தான் தீபிகாவை காதலிப்பதாக கூறி வருகிறாரே தவிர தீபிகா அது பற்றி வாய் திறக்கவில்லை. தீபிகா ரன்வீரை கழற்றிவிடும் வாய்ப்பும் உள்ளது என்று பாலிவுட்டில் பேச்சாக உள்ளது.

English summary
Bollywood actor Ranbir Kapoor and actress Katrina Kaif are no longer a couple. Ranbir's ex-girlfriend Deepika Padukone is said to be the reason behind this.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil