»   »  ஐஸ்வர்யா ராயுடன் நெருங்கி நடிக்க வெட்கம் வெட்கமா வந்தது: ரன்பிர் கபூர்

ஐஸ்வர்யா ராயுடன் நெருங்கி நடிக்க வெட்கம் வெட்கமா வந்தது: ரன்பிர் கபூர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் நெருக்கமாக நடிக்க ரன்பிர் கபூருக்கு வெட்கமாக இருந்ததாம்.

கரண் ஜோஹார் இயக்கத்தில் ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள ஏ தில் ஹை முஷ்கில் படம் வரும் 30ம் தேதி ரிலீஸாகிறது. படத்தில் ரன்பிர், ஐஸ்வர்யா ராய் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் படம் மற்றும் ஐஸ்வர்யா பற்றி ரன்பிர் கூறுகையில்,

வெட்கம்

வெட்கம்

எனக்கு ஐஸ்வர்யா ராயுடன் நெருக்கமாக நடிக்க வெட்கம் வெட்கமாக வந்தது. கையெல்லாம் நடுங்கியது. அவரது கன்னத்தை தொடக் கூட ஒரு மாதிரியாக இருந்தது.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

நான் வெட்கத்தால் நடுங்கியதை பார்த்த ஐஸ்வர்யா ராயோ உனக்கு என்ன பிரச்சனை? நாம் நடிக்கத் தான் செய்கிறோம் ஒழுங்காக நடி என்று தைரியம் கொடுத்தார்.

வாய்ப்பு

வாய்ப்பு

முதலில் நடுங்கினாலும் பின்னர் ஐஸ்வர்யா ராயுடன் இது போன்று நடிக்க வாய்ப்பு கிடைக்காது. அதனால் துணிந்து வாய்ப்பை பயன்படுத்திக் கொள் என்று எனக்கு நானே கூறி நடித்தேன்.

ரன்பிர்

ரன்பிர்

நான் பத்தாம் வகுப்பு முடித்திருந்தபோது ஐஸ்வர்யா ராயை முதன்முதலாக சந்தித்தேன். நான் என் தந்தையின் படத்தில் துணை இயக்குனராக இருந்தேன். அந்த படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் எனக்கு தோழியானார்.

English summary
Bollywood actor Ranbir Kapoor said he was not comfortable in getting intimate with Aishwarya Rai in Ae Dil Hai Mushkil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil