»   »  தீபாவளி பார்ட்டியில் சல்மானை பார்த்ததும் எஸ்கேப் ஆன ரன்பிர்-கத்ரீனா

தீபாவளி பார்ட்டியில் சல்மானை பார்த்ததும் எஸ்கேப் ஆன ரன்பிர்-கத்ரீனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் அனில் கபூர் அளித்த தீபாவளி பார்ட்டியில் ரன்பிர் கபூரம், அவரது காதலி கத்ரீனா கைஃபும் சல்மான் கானை பார்த்ததும் நைசாக நழுவி அங்கிருந்து சென்றுள்ளார்.

பாலிவுட் பிரபலங்கள் தீபாவளி பண்டிகையையொட்டி சக நடிகர், நடிகைகளுக்கு பார்ட்டிகள் கொடுப்பது வழக்கம். இந்நிலையில் பாலிவுட் நடிகர் அனில் கபூர் தனது வீட்டில் தீபாவளி பார்ட்டி அளித்துள்ளார்.

பார்ட்டிக்கு நடிகர் ரன்பிர் கபூர் தனது காதலியும், நடிகையுமான கத்ரீனா கைஃபுடன் ஜோடியாக வந்துள்ளார். அவர்கள் அனில் மற்றும் அவரது மகள் சோனம் கபூரை சந்தித்து வாழ்த்தி அன்பளிப்பு அளித்துள்ளனர்.

Ranbir, Katrina aviod Salman at a party

அந்த நேரம் சல்மான் கான் அனில் கபூர் வீட்டுக்கு தனது படை சூழ வந்துள்ளார். சல்மான் வந்ததும் அனைவரும் அவரை பார்க்க அந்த சந்து கேப்பில் ரன்பிரும், கத்ரீனாவும் அங்கிருந்து அவசர அவசரமாக கிளம்பிச் சென்றுள்ளனர்.

சல்மான் வீட்டு விசேஷத்தில் தான் ரன்பிர் கத்ரீனா முதன்முதலாக சந்தித்து பேசினார். கத்ரீனா சல்மானின் முன்னாள் காதலி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actor Ranbir Kapoor and his girlfriend Katrina Kaif have avoided Salman Khan at a party given by actor Anil Kapoor.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil