Just In
- 5 min ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 1 hr ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 1 hr ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
- 1 hr ago
சம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரங்கா... திரில்லர் மூவி மூலம் ரசிகர்களை மிரள வைக்க வருகிறார் சிபிராஜ்
சென்னை: சிபிராஜ் நடிப்பில் உருவான அதிரடி திரில்லர் படமான ரங்கா படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதன் ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என்று படக்குழு தெரிவித்துள்ளது
கடந்த 1982ஆம் ஆண்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா இணைந்து அதிரடி மற்றும் காமெடியில் கலக்கிய படம் ரங்கா. வசூலிலும் சாதனை படைத்த படம். தற்போது அதே தலைப்பில் சிபிராஜ் நடிப்பில் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

குசும்பு என்றாலே அது நம்ம சத்யராஜ் தான். அவரின் வாரிசு என்றால் சும்மாவா. அவர் எட்டடி பாய்ந்தால் அவருடைய வாரிசு சிபிராஜ் பதினாறு அடி பாய்கிறார். பிரதீப் க்ரிஷ்ணமூர்த்தி தயாரிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான மர்ம திரில்லர் சத்யா படத்திற்கு பிறகு நடித்திருக்கும் திரில்லர் படம் ரங்கா. படத்தின் டைட்டில் கேட்டவுடனேயே நம் நினைவுக்கு வருவது சூப்பர் ஸ்டார் நடித்த ரங்கா படம் தான்.
பாஸ் மூவிஸ் சார்பில் விஜய்.கே.செல்லய்யா தயாரிப்பில் இப்படத்தை இயக்கியுள்ளார் வினோத். D.L.ராம் ஜீவன் இசையமைத்துள்ள இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக, நிகிலா விமல் நடிக்கிறார். சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ட்ரைலர் முழுவதும் குளுமையான இருட்டு பிரதேசமாக காணப்படுகிறது. படத்தின் காட்சிகள் பொள்ளாச்சி, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் சிபிராஜுக்கு ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறார்.
ட்ரைலர் பார்க்கும் போதே மிகவும் த்ரில்லிங் ஆக இருக்கிறது என்றால், படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. த்ரில்லர் படம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த ஆவல் இந்த படத்திற்கும் இருக்கிறது. இப்படத்தில் ஆடியோ வெளியிட்டு விழா மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றுள்ளார் படக்குழுவினர். அதுவரை பொறுத்திருப்போம்.