»   »  யூ-ட்யூபை தெறிக்கவிடும் சமந்தா இடம்பெற்ற 'ரங்கஸ்தலம்' டீசர்!

யூ-ட்யூபை தெறிக்கவிடும் சமந்தா இடம்பெற்ற 'ரங்கஸ்தலம்' டீசர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
இன்றைய ட்ரெண்டிங் டாபிக் சமந்தா

ஐதராபாத் : தெலுங்கில் ராம்சரண், சமந்தா நடித்து வரும் படம் 'ரங்கஸ்தலம்'. 1985-ல் நடக்கும் கிராமத்து கதையில் இந்த படம் உருவாகியிருக்கிறது.

இப்படத்தில் சமந்தா மிக வித்தியாசமான ரோலில் நடித்திருக்கிறார். கிராமத்துப் பெண்ணாக பாவாடை தாவணி அணிந்து நடித்திருக்கிறார் சமந்தா.

ஜனவரி 24-ம் தேதி இப்படத்தின் டீசர் வெளியானது. அதில் சமந்தா இடம்பெறாத நிலையில், நேற்று சமந்தா இடம்பெறும் டீசர் வெளியாகியிருக்கிறது.

சமந்தா இல்லாத டீசர்

ஜனவரி 24-ம் தேதி வெளியான 'ரங்கஸ்தலம்' டீசரில் கதாநாயகி சமந்தா ஒரு காட்சியில் கூட இடம்பெறவே இல்லை. இது சமந்தா ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. சமந்தாவின் லுக் ஏற்கெனவே லீக் ஆகியிருந்தாலும், டீசரில் அவரைப் பார்க்க ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு ரங்கஸ்தலம் டீசர் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ரசிகர்களிடம் வரவேற்பு

ரசிகர்களிடம் வரவேற்பு

சமந்தாவின் அந்த தனித்துவமான தோற்றம் விரைவில் வெளியிடப்படும் என்று 'ரங்கஸ்தலம்' படத்தின் இயக்குனர் சுகுமார் அறிவித்தார். 'ரங்கஸ்தலம்' திரைப்படம் திருமணத்துக்குப் பிறகு சமந்தா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

சமந்தா இடம்பெறும் டீசர்

சமந்தா இடம்பெறும் டீசர்

இந்நிலையில், சமந்தா இடம்பெறும் லேட்டஸ்ட் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரில் சமந்தா கிராமத்து பெண்ணாக வருகிறார். இதில் சமந்தா பாவாடை தாவணி அணிந்து சைக்கிள் ஓட்டுவதும், குச்சிகளை தலையில் சுமந்தபடி நடப்பது போன்றும் காட்சிகள் உள்ளன.

ட்ரெண்டிங்

முன்னதாக, பாவாடை தாவணி அணிந்தவாறு சமந்தாவின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருந்தன. சமந்தா இடம்பெற்றிருக்கும் இந்த டீசர் யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருக்கிறது.

English summary
'Rangasthalam' latest teaser released officially. Samantha's teaser has been the top trending in YouTube.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil