»   »  'ரங்கஸ்தலம்' தெறிக்கவிடும் வசூல்.. அமெரிக்காவிலும் சமந்தா தான் டாப்!

'ரங்கஸ்தலம்' தெறிக்கவிடும் வசூல்.. அமெரிக்காவிலும் சமந்தா தான் டாப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ராம்சரண் தேஜா, சமந்தா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது 'ரங்கஸ்தலம்' தெலுங்கு திரைப்படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் ராம்சரண், சமந்தா மற்றும் ஆதியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கிராமத்து மனிதர்களாக ராம்சரணும், சமந்தாவும் கலக்கியிருக்கிறார்கள். ரங்கஸ்தலம் அமெரிக்காவில் ரிலீஸ் ஆன முதல் நாளே 1 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்துவிட்டது.

Rangathalam box office collection

மேலும், உலகம் முழுவதும் இப்படம் ஒரே நாளில் ரூபாய் 46 கோடி வசூல் செய்துவிட்டதாம். இதன் மூலம் விநியோகஸ்தர்கள் ஷேர் ரூபாய் 30 கோடி கிடைத்துள்ளது. இதுமட்டுமின்றி தமிழகத்தில் வேறு எந்த புதிய படங்களும் வெளிவராததால் ரங்கஸ்தலம் ரூபாய் 75 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாம்.

தென்னிந்திய நடிகைகளில் அதிக முறை மில்லியன் டாலர் வசூலைக் கடந்திருக்கிறார் சமந்தா. அவர் நடித்த 10 தெலுங்குப் படங்களும், 'தெறி', '24', 'மெர்சல்' ஆகிய தமிழ்ப் படங்களும் அமெரிக்காவில் 10 லட்சம் டாலர் வசூலைக் கடந்திருக்கின்றன.

திருமணமான பின்னும் சமந்தாவிற்கு இருக்கும் வரவேற்பு மற்ற இளம் நடிகைகளை பொறாமைப்பட வைத்திருக்கிறது. சமந்தா நடித்து இந்த வருடத்தின் முதல் படமான 'ரங்கஸ்தலம்' தெலுங்குப் படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

அடுத்து தமிழ், தெலுங்கில் 'மகாநதி', 'இரும்புத்திரை', 'சீமராஜா', 'சூப்பர் டீலக்ஸ்', 'யு டர்ன்' என இந்த ஆண்டிலேயே ரிலீஸுக்காக பல படங்களை கையில் வைத்திருக்கிறார் சமந்தா. எல்லாப் படங்களுக்கும் இப்போதே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது.

English summary
Ramcharan, Samantha starred 'Rangasthalam' collects 1 million dollars in america in a day. 'Rangasthalam' box office collection Rs. 46 crores worldwide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X