»   »  ஸ்ரீதேவி வாய்விட்டு கேட்ட ஆசை நிறைவேறாமலேயே சென்றுவிட்டார்: பிரபல நடிகை கவலை

ஸ்ரீதேவி வாய்விட்டு கேட்ட ஆசை நிறைவேறாமலேயே சென்றுவிட்டார்: பிரபல நடிகை கவலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஸ்ரீதேவி தன்னிடம் போன் செய்து சொன்ன ஆசை நிறைவேறாமலேயே இறந்துவிட்டதாக பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி நடித்த ஹிச்கி படம் வெள்ளிக்கிழமை ரிலீஸானது. இந்த படம் ஓடாவிட்டால் தான் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொள்ளப் போவதாக ராணி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் நடிகை ஸ்ரீதேவி பற்றி கூறியிருப்பதாவது,

நெருக்கம்

நெருக்கம்

ஸ்ரீதேவி எனக்கு மிகவும் நெருக்கமானவர். அவரின் சாந்தினி, லம்ஹே போன்ற படங்களை பார்த்து வளர்ந்தவள் நான். அவரின் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு ஆகும்.

தாய்மை

தாய்மை

என் மகள் ஆதிரா பிறந்த பிறகு நானும், ஸ்ரீதேவியும் நெருக்கமாகிவிட்டோம். தாய்மை குறித்து அவர் எனக்கு பல டிப்ஸ்கள் கொடுத்திருக்கிறார். நாங்கள் தோழிகளாகிவிட்டோம்.

ஷூட்டிங்

ஷூட்டிங்

நான் பள்ளி சீருடையில் ஸ்ரீதேவியின் ஷூட்டிங்கிற்கு சென்றுள்ளேன். 2 மாதத்தில் என் வாழ்வின் இரண்டு முக்கிய நபர்களை இழந்துவிட்டேன். ஒன்று என் அப்பா, மற்றொன்று ஸ்ரீதேவி.

ஹிச்கி

ஹிச்கி

நான் ஹிச்கி விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்தேன். ஸ்ரீதேவி துபாய் சென்றார். அவர் இறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு எனக்கு போன் செய்து லட்டூ(அவர் என்னை அப்படித் தான் அழைப்பார்) நான் ஹிச்கி பார்க்க விரும்புகிறேன் என்றார்.

பார்க்கவில்லை

பார்க்கவில்லை

ஸ்ரீதேவி அம்மா என் படத்தை பார்க்க ஆசைப்பட்டும் பார்க்க முடியவில்லை. படத்தை அவருக்கு போட்டுக் காட்டி அவரின் கருத்தை தெரிந்து கொள்ள நினைத்தேன் என்றார் ராணி முகர்ஜி.

English summary
Bollywood actress Rani Mukerji said that Sridevi called her 15 days before she passed away and expressed her desire to watch the former's latest outing Hitchki.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X