ஹேராம் ஷூட்டிங்கில் கமல் சொன்ன அந்த வார்த்தைதான்... ராணி முகர்ஜி நெகிழ்ச்சி பிளாஷ்பேக்
சென்னை: ஹேராம் பட ஷூட்டிங்கின் போது கமல்ஹாசன் சொன்ன அந்த வார்த்தைதான் தனக்கு பெரும் நம்பிக்கையாக இருந்தது என்று நடிகை ராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்த படம், 'ஹே ராம்'. பரபரப்பாக பேசப்பட்ட இந்த படத்தில், கமல்ஹாசனுடன் இணைந்து ஷாருக் கான், ராணி முகர்ஜி, கிரீஷ் கர்நாட், ஹேமமாலினி, வசுந்தரா தாஸ் உட்பட பலர் நடித்திருந்தனர்.
ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் விதத்தில், ஹே ராம் எனும் கல்ட் படத்தை கமல் இயக்கி, நடித்திருந்தார்.

தேசிய விருதுகள்
கடந்த 2000 ஆம் ஆண்டு தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கமல்ஹாசன் இயக்கி நடித்த இந்த திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை குவித்தது. கோலிவுட், பாலிவுட் நடிகர்களை கொண்டு அப்பவே அப்படி ஒரு பிரம்மாண்ட படைப்பை கமல் இயக்கி இருந்தார். ஹே ராம் படம் வெளியாகி இன்றோடு 20 வருடங்கள் ஆகிறது.

ஹாஷ்டேக்
இதுபற்றி நடிகர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று காலை ட்வீட் போட்டிருந்தா. இதைத் தொடர்ந்து, #20YearsOfHeyRam என்ற ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வந்தது. சென்னை டிரெண்டிங்கில் தொடர்ந்து, முதலிடத்தில் இருந்தது.
இந்தப் படத்தின் கதையை கேட்ட நடிகர் ஷாருக்கான், அந்த படத்தில் நடிக்க உடனடியாக ஒப்புக் கொண்டார். இதில் நடிக்க ஒரு ரூபாய் கூட சம்பளமாக அவர் வாங்க வில்லையாம்.

தாழ்வு மனப்பான்மை
இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த ராணி முகர்ஜி, அவருடனான, அனுபவங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். உடல் உயரம் குறித்த தாழ்வு மனப்பான்மை இருந்ததால், ஹைஹீல்ஸ் போன்ற செருப்புகளை அணிவதை அப்போது வழக்கமாக கொண்டிருந்தாராம் ராணி முகர்ஜி.
இதைக் கண்ட கமல்ஹாசன், உயரம் குறித்த தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டாம் என்று அட்வைஸ் செய்துள்ளார்.

உடல் உயரம் அல்ல
சாதனைகளும், உழைப்புமே உயரத்தை பற்றி பேச வேண்டும் என்றும், உடல் உயரம் அல்ல என்றும் கமல்ஹாசன் அப்போது தெரிவித்த வார்த்தைகள்தான் என் நம்பிக்கையை அதிகரித்தது. நடிகர்களுக்கு உயரம் தேவை இல்லை, நடிப்பு தேவை என்பதை பிறகுதான் நம்பத் தொடங்கியதாக நடிகை ராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











