»   »  ரஜினி பட டிஸ்கசனுக்கே 3 லட்சமா?

ரஜினி பட டிஸ்கசனுக்கே 3 லட்சமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் ரஞ்சித், ரஜினிகாந்த்தை வைத்து எடுக்கப் போகும் புதிய படத்திற்கான கதை விவாதத்தில் உதவி இயக்குனர்களுடன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

கதை விவாததத்திற்காக சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் செலவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து உதவி இயக்குனர்களுடன் சேர்ந்து டிஸ்கஸ் செய்து காட்சிகளை மெருகேற்றிக் கொண்டு உள்ளார்.

அட, கதை விவாதத்திற்கே மூன்றரை லட்சம் செலவில் வீடா? என்று பலரும் ஆச்சரியப் பட்டு வருகிறார்கள்.

ரஜினியின் புதிய படம்:

ரஜினியின் புதிய படம்:

தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படத்தை இயக்குனர் ரஞ்சித் இயக்க உள்ளார். ரஜினியின் கடைசி இரு படங்களான கோச்சடையான், லிங்கா இரண்டுமே சரியாகப் போகவில்லை எனவே ரஜினியின் பார்வை புதுமுக இயுக்குனர்களின் மீது திரும்பியுள்ளது.

அடித்தது ரஞ்சித்திற்கு அதிர்ஷ்டம்:

அடித்தது ரஞ்சித்திற்கு அதிர்ஷ்டம்:

சென்னை மண்ணின் மைந்தனான ரஞ்சித்திற்கு அவரின் கடைசி படமான மெட்ராசால் அடித்தது அதிர்ஷ்டம். இந்தப் படத்தை பார்த்து தான் தனது அடுத்த படத்திற்கு ரஞ்சித்தை டிக் அடித்தார் ரஜினி.

டிஸ்கசனுக்கு 3 லட்சமா:

டிஸ்கசனுக்கு 3 லட்சமா:

இப்படத்தில் ரஜினி தாதாவாக நடிப்பதால் காட்சிகளை புதிதாக ரஜினியின் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி அமைத்து வரும் ரஞ்சித் கதை பற்றிய டிஸ்கசனுக்காக 3 லட்சம் ரூபாய் செலவில் வாடகை வீடு ஒன்றை எடுத்திருக்கிறார்.

ரஜினுக்கு ஜோடி இல்லை:

ரஜினுக்கு ஜோடி இல்லை:

ஆக்சனை மையமாகக் கொண்ட இப்படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாது என்றும் ரஜினிக்கு ஜோடி இல்லாவிடில் படம் நன்றாக இருக்காது அவசியம் ஒரு நாயகியை சேருங்கள் என்று சிலர் வலியுறுத்தி வருவதாக கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது.

இசை அமைப்பாளர் மாறலாம்:

இசை அமைப்பாளர் மாறலாம்:

இந்த நிலையில், சந்தோஷ் நாராயணனுக்குப் பதிலாக இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசை அமைக்கலாம் என்று அதிகாரப் பூர்வமற்ற தகவல்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன.

எது எப்படியோ படம் நன்றாக வந்தால் ரசிகர்களுக்குச் சந்தோசம் தான்....

English summary
Director Ranjith has been roped in to direct Rajinikanth in his yet-untitled next Tamil project, he is spend more than 3 lakhs for the story discussion.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil