twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குரு - சீடர் உறவு கொண்ட எங்களை கொச்சைப்படுத்துகிறார் ஜெயேந்திரர்! - ரஞ்சிதா

    By Shankar
    |

    Ranjitha
    சென்னை: நித்யானந்தாவுடன் என்னை தேவையில்லாமல் தொடர்புபடுத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை ரஞ்சிதா.

    நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக பதவி ஏற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெயேந்திரர், "நித்யானந்தாவுக்கு ஆதீனம் பட்டம் வழங்கியதை ஏற்க முடியாது. நடிகை ரஞ்சிதா எப்போதும் அவருடன் இருக்கிறார்," என்று கூறி இருந்தார்.

    இதற்கு நித்யானந்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 10 நாட்களுக்குள் ஜெயேந்திரர் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று கெடு விதித்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை 10.00 மணியளவில் நடிகை ரஞ்சிதாவின் வக்கீல்கள் முருகையன் பாபு, சண்முக சுந்தரம், கோபி, அருண்குமார் ஆகியோர் எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் கோர்ட்டுக்கு வந்தனர்.

    அங்கு அவர்கள் ஜெயேந்திரருக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடர்ந்தனர்.

    அந்த மனுவில், "நான் (ரஞ்சிதா) தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட சினிமா படங்களில் நடித்துள்ளேன். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளேன்.

    இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். ராகேஷ் ராமச்சந்திராமேனன் என்ற ராணுவ வீரரை நான் திருமணம் செய்துள்ளேன். சமுதாயத்தில் நான் நல்ல பெயருடன் வாழ்ந்து வருகிறேன். பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளேன். நித்யானந்தா சுவாமிகளின் ஆசிரமத்துக்கு சென்று வரும் நான் அவரது சீடராகவும் உள்ளேன்.

    நித்யானந்தா சார்பில் நடத்தப்படும் மாநாடுகள், விழாக்களில் நான் கலந்து கொண்டுள்ளேன். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அளித்த ஒரு பேட்டியில் ரஞ்சிதா என்பவர் நித்யானந்தாவுடன் எப்போதும் இருக்கிறார் என்று கூறியுள்ளார். இது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

    ஜெயேந்திரரின் இந்த பேட்டி எனக்கும் நித்யானந்தாவுக்கும் உள்ள குரு- சீடர் உறவை கொச்சைப்படுத்துவது போல உள்ளது. ஜெயேந்திரர் பேட்டியை பார்த்த என் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சகோதரி ஜோதி ஆகியோர் என்னை போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.

    ஜெயேந்திரருக்கு தகுதியில்லை

    ஜெயேந்திரர் மீது சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கு ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அவர் என்னைப்பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.

    எனவே அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 499 மற்றும் 500 ஆகியவற்றின் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்," என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    காலை 11 மணியளவில் நடிகை ரஞ்சிதா எழும்பூர் நீதிமன்றத்துக்கு வந்தார். நீதிபதி வி.பி. ரவீந்திரன் முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. அவரை நீதிபதி திங்கட்கிழமை வாருங்கள் என்றார். இதையடுத்து நடிகை ரஞ்சிதா நீதிமன்றத்தை விட்டு வெளியில் வந்தார்.

    அதன் பிறகு ரஞ்சிதா வக்கீல்கள் கூறுகையில், நீதிபதி முதலில் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்தபோது, ரஞ்சிதா நீதிமன்றத்துக்கு வந்து சேர இயலவில்லை. எனவே திங்கட்கிழமை விசாரணை நடைபெறும் என்றனர்.

    இதையடுத்து நடிகை ரஞ்சிதா நிருபர்களிடம் பேசுகையில், "என்னைப்பற்றி ஜெயேந்திரர் கூறிய கருத்துக்களில் எந்தவித உண்மையும் இல்லை. எனவே அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர நீதிமன்றத்துக்கு வந்தேன். இது தொடர்பாக நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் திங்கட்கிழமை விரிவாக பதில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

    English summary
    Actress Ranjitha says that Jayendirar hasn't any quality to comment her relationship with Nithyananda.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X