விவாகரத்து முடிவில் தீபிகா படுகோன்- ரன்வீர் சிங்..கவலையில் ரசிகர்கள்.. ஜோசியர் சொன்ன தகவல் என்ன?

மும்பை : பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளான ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் விவாகரத்து செய்ய உள்ளதாக இணையத்தில் தகவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர் கடந்த 2018-ஆம் ஆண்டு இத்தாலியில் கோலாகலமாக மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

மும்பையில் ரன்வீரின் வீட்டில் இருவரும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். திருமணத்திற்கு பிறகும் தீபிகா படுகோனே பல படங்களை கையில் வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வருகிறார்.

நடிகை தீபிகா படுகோனே

நடிகை தீபிகா படுகோனே

பாலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை தீபிகா படுகோனே, தமிழில் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் மூலம் அறிமுகமானார். டாப் நடிகைகளின் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் தீபிகா படுகோனே தான். தற்போது பிரபாஸுடன் இணைந்து பிராஜெட் கே படத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் ஷாருக்கானுடன் பதான், ஜவான் போன்ற படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

பிரிந்து விடுவார்கள்

பிரிந்து விடுவார்கள்

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ரன்வீர் சிங்கும், தீபிகாவும் மனம் ஒத்து வாழவில்லை என்றும், இருவருக்கும் இடையே உறவில் இடைவெளி இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இதனால் இருவரும் விரைவில் விவாகரத்து பெற்று பிரிந்துவிடுவார்கள் என்று பாலிவுட்டில் தகவல்கள் கசிந்து வருகிறது.

பூதாகரமாகும் வதந்தி

பூதாகரமாகும் வதந்தி

உமைர் சாண்டு என்ற பெயரில் ஒரு ட்விட்டர் கணக்கிலிருந்து தீபிகாவும் ரன்வீரும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாக பதிவிட்டது தான் பாலிவிட்டின் சலசலப்புக்கு காரணம். நட்சத்திரங்கள் குறித்து இணையத்தில் பரவும் வதந்தி வழக்கமானது தான் என்றாலும், இந்த அளவுக்கு பூதாகரமாகி வரும் வதந்தி குறித்து தீபிகாவும், ரன்வீரும் அமைதியாக இருப்பது தான் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

உடல் நிலைபாதிப்பு

உடல் நிலைபாதிப்பு

அண்மையில் தீபிகாவும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மும்பை பீச் கோட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு முன்பும் பிராஜெட் கே படப்பிடிப்பு தளத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டார். தீபிகா மற்றும் ரன்வீர் சிங்கின் பிரிவால் தொடர்ந்து தீபிகா, மனப்போராட்டதை சந்தித்து வருவதால்தான் அவர் உடல்நிலை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஜோதிடர் கருத்து

ஜோதிடர் கருத்து

இணையத்தில் வெளியான இந்த தகவலால் கவலையில் ஆழ்ந்துப்போன ரசிகர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் பிரபல ஜோதிடர் ஒருவர், தீபிகாவின் ராசிப்படி சந்திரனும் சுக்கிரனும் சரியான இடத்தில் இருக்கிறது. இதனால், ரன்வீர்-தீபிகா பிரிய வாய்ப்பு இல்லை. ஆனால், குழந்தை பற்றி நல்ல செய்திக்கு அந்தஜோடி 2024 வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஜோதிடரின் அந்த தகவலால் ரசிகர் சற்று பெருமூச்சு விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X