Don't Miss!
- News
எச்.ராஜா வீட்டருகே பெரியார் சிலை.. அகற்றிய காரைக்குடி போலீஸ்! "பாஜக ஆட்சியா?" என கொந்தளிக்கும் திவிக
- Lifestyle
Shani Asta 2023: சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் மார்ச் 5 வரை இந்த ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Sports
சச்சினாலேயே முடியவில்லை, மற்றவர்களால் எப்படி முடியும்.. கோலி, ரோகித்துக்கு அஸ்வின் ஆதரவு
- Finance
மாதம் ரூ.5000 வருமானம் வேண்டுமா..அஞ்சலகத்தோட MIS திட்டம் தான் சரியான சாய்ஸ்..!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
வாத்தி கம்மிங் டான்ஸ்...கேஜிஎஃப் டயலாக்...ஐபிஎல் நிறைவு நாளில் அதகளப்படுத்திய ரன்வீர் சிங்
மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நிறைவு நாளில் பாலிவுட் நடிகர் ரன்வீர் நடனமாடியது, பேசிய டயலாக் ஆகியன ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐபிஎல் எனப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் நிறைவு விழா நேற்று இரவு நடைபெற்றது. 15 வது ஐபிஎல் நிறைவு விழாவில் ரன்வீர் சிங், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். ஃபைனலில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடின.
சேலையில்
சிக்கென
கவர்ச்சி
காட்டிய
தமன்னா..
கதவை
மூடி
திறந்ததும்
செம
ஷாக்..
என்னன்னு
பாருங்க!

அதளகளப்படுத்திய ரன்வீர் சிங்
இதில் இரு அணிகளையும் உற்சாகப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மிக பிரபலமான பாடல்களுக்கு நடனம் ஆடினார். இதில் விஜய்யின் வாத்தி கம்மிங், ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண்-ஜுனியர் என்டிஆர் இணைந்து ஆடிய நாட்டு நாட்டு பாடல் உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களின் பாடல்களுக்கு நடனமாடி அசத்தினார். இவற்றில் மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு ரன்வீர் சிங், அதே ஸ்டெப் போட்டு நடனமாடியது தான் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

கொண்டாடிய ரசிகர்கள்
வாத்தி கம்மிங் பாடலுக்கு ரன்வீர் ஆடிய வீடியோவை சோஷியல் மீடியாவில் அதிகம் பகிர்ந்து ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். வாத்தி கம்மிங் பாடல் யூட்யூப்பில் 360 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்ற பாடல்.அனிருத் இசையில் உருவாக்கப்பட்ட இந்த பாடல் வட சென்னையின் கானா மற்றும் வெஸ்டர்ன் கலந்து அமைக்கப்பட்டிருக்கும்.

ராக்கி பாயாக மாறிய ரன்வீர்
மொத்தம் 15 நிமிடங்கள் ரன்வீர் நடனமாடினார். பல ஹிட்டான தென்னிந்திய மொழி பட பாடல்களுக்கு நடனமாடியவர் சமீபத்திய மாஸ் ஹிட் படமான கேஜிஎஃப் 2 படத்தில் வரும் தீரா தீரா பாடலுக்கும் நடனமாடினார். அந்த பாடலுக்கு இடையே, கேஜிஎஃப் 2 படத்தின் மிகவும் பிரபலமான டயலாக்கான, வயலன்ஸ்...வயலன்ஸ் டயலாக்கை பேசி காட்டினார்.

செம வைரலாகும் வீடியோ
ரன்வீர் சிங் இந்த டயலாக்கை பேசிய போது மைதானத்தில் ரசிகர்கள் ஆர்ப்பறித்தனர். தங்களின் ஃபேவரைட் ஸ்டார்களின் பாடலுக்கு ரன்வீர் சிங் ஆடியதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த வீடியோவை ரன்வீர் சிங்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.