»   »  'பத்மாவதி' படத்தில் ரன்வீர் சிங்கின் கோலம் - ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

'பத்மாவதி' படத்தில் ரன்வீர் சிங்கின் கோலம் - ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : சரித்திரப் படமாக உருவாகி வரும் 'பத்மாவதி' படத்தில் 'பாகுபலி' படத்தில் பின்பற்றிய விளம்பர யுக்தியை படக்குழுவினர் பின்பற்றி வருகின்றனர். 'பாகுபலி படம்' உருவாகி வந்தபோது அந்தப்படத்தின் ஒவ்வொரு கேரக்டரின் ஃபர்ஸ்ட் லுக்கையும் தனித்தனியாக வெளியிட்டனர்.

இப்போது அதேபோன்று 'பத்மாவதி' படத்தின் ஒவ்வொரு கேரக்டரின் ஃபர்ஸ்ட் லுக்கும் தனித்தனியாக வெளியிடப்பட்டு வருகிறது. ஏற்கெனவே தீபிகா படுகோனே மற்றும் ஷாகித் கபூரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் இப்போது ரன்வீர் சிங்கின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

Ranveer singh's look in padmavati

ரன்வீர் சிங், சுல்தான் அலாவுதின் கில்ஜி வேடத்தில் 'பத்மாவதி' படத்தில் நடிக்கிறார். சிறிய நீச்சல் குளம் ஒன்றில் அகன்ற மார்பும் நீண்ட தலைமுடியுமாகக் காட்சி அளிக்கிறார் ரன்வீர். இந்தப் படத்தில் ரன்வீர், நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது இந்த ஃபர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 'பத்மாவதி' படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்க, வைக்கோம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் வருகிற டிசம்பர் 1-ம் தேதி வெளியாகிறது.

English summary
'Padmavati' team is following marketing strategy followed by the 'baahubali' team. The first look of each character in 'Padmavati' is being released. Ranveer Singh's First Look is released now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil