twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எதிரிகள் பற்றி ட்வீட்டிய சில மணிநேரத்தில் பிரபல பாடகர் சுட்டுக் கொலை

    By Siva
    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ராப் இசை கலைஞர் நிப்ஸி ஹஸல் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல ராப் இசை கலைஞர் நிப்ஸி ஹஸல்(33). அவரின் விக்டரி லேப் ஆல்பம் இந்த ஆண்டுக்கான கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    Rapper Nipsey Hussle shot dead

    இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் அவரின் துணிக் கடைக்கு வெளியே நேற்று மதியம் அவரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் நிப்ஸி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    நிப்ஸியை சுட்டுக் கொன்றவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் குற்றவாளியை தேடி வருகிறார்கள்.

    சுட்டுக் கொலை செய்யப்படுவதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு தான் நிப்ஸி எதிரிகள் பற்றி ட்வீட் செய்திருந்தார். வலுவான எதிரிகள் இருப்பது ஆசிர்வாதம் என்று அவர் ட்வீட் செய்திருந்தனர்.

    நிப்ஸி கொலை செய்யப்பட்டது குறித்து அறிந்து பிரபல பாடகி ரிஹானா அதிர்ச்சி அடைந்து ட்விட்டரில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    English summary
    Grammy nominated US rapper Nipsey Hussle was shot dead in the USA on sunday afternoon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X