சினிமாவில் நடிக்க ஆசையா?… நடிகர் சித்தார்த்துடன் நடிக்க அரிய வாய்ப்பு !
சென்னை : இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த், தனது 35வது திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வட இந்திய முகச்சாயல் கொண்டவர் தேவைப்படுவதாக விளம்பரப்படுத்தி உள்ளார்.
நடிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களின புகைப்படங்களை மெயில் மூலமாகவோ வாட்ஸ் அப் எண் மூலமாகவும் அனுப்புமாறு கூறியுள்ளார்.
புகைப்படங்களை அனுப்ப கடைசி நாள் ஆகஸ்ட் 15ந் தேதி என்றும் நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

அறிமுகம்
ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்ற பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சித்தார்த். அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

பிஸியாக நடித்து வருகிறார்
உதயம் என்ஹெச்4,காவியத் தலைவன், அருவம், சிவப்பு மஞ்சள் பச்சை என வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தற்போது, சைத்தான்கே பச்சா, டக்கர், இந்தியன் 2 ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

வில்லன் தேவை
இந்நிலையில்,சித்தார்த் ஒரு புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். அது சித்தார்த்தின் 35வது திரைப்படமாகும்.அந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க 30 முதல் 35 வயதுள்ள ஆண் நடிகர்கள் தேவைப்படுகின்றனர். அதே போல வட இந்திய முகச்சாயல் கொண்ட 30முதல் 50 வயதுள்ள ஆண் நடிகர்களும் தேவைப்படுகின்றனர்.
Recommended Video

விண்ணப்பிக்கலாம்
வட இந்திய முகச்சாயல் கொண்ட 20 முதல் 30 வயதுள்ள பெண்களும், 6 முதல் 8 வயதுள்ள குழந்தை நட்சத்திரங்களும் தேவைப்படுகின்றனர். நடிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களின புகைப்படங்களை Siddarth35gmail.com என்ற மெயிலுக்கோ அல்லது 9626230062 என்ற வாட்ஸ் அப் எண்ணில் அனுப்பலாம் என்றும், புகைப்படங்களை அனுப்ப கடைசி நாள் ஆகஸ்ட் 15ந் தேதி என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











