Don't Miss!
- News
சகோதரி மறைவால் துடிதுடித்துப் போன துர்கா ஸ்டாலின்! ஆறுதல் சொல்லி தேற்றிய குடும்பத்தினர்!
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என் நெஞ்சில் குடியிருக்கும்.. அந்தவொரு வார்த்தை கேட்கத்தான் வெயிட்டிங்.. சென்னை வந்த ராஷ்மிகா!
சென்னை: வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 4 மணி முதல் ஆரம்பமாகிறது. பல ஊர்களில் இருந்து சென்னை நேரு ஸ்டேடியத்தை நோக்கி விஜய் ரசிகர்கள் காலையிலேயே படையெடுத்து விட்டனர். இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய காட்சிகள் டிரெண்டாகி வருகின்றன.
வாரிசு ஆடியோ லாஞ்ச் மற்றும் #என்நெஞ்சில்குடிஇருக்கும் ஹாஷ்டேக்குகள் ட்விட்டரில் தாறுமாறாக டிரெண்டாகி வருகின்றன.
தளபதி விஜய்யின் பேச்சை கேட்க விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மோசடி
புகார்...
தொடர்ந்து
தலைமறைவு...
மீரா
மிதுன்
தாக்கல்
செய்த
வழக்கை
தள்ளுபடி
செய்த
நீதிமன்றம்

வாரிசு பாடல்கள்
வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான ரஞ்சிதமே, தீ தளபதி மற்றும் Soul of Varisu எனும் அம்மா பாடல் அனைத்துமே ஹிட் அடித்துள்ளன. மேலும், ராஷ்மிகாவுடன் ஒரு டூயட் பாடல், வாரிசு இன்ட்ரோ சாங் மற்றும் ஆல் தோட்ட பூபதி ரீமிக்ஸ் வெர்ஷன் உள்ளிட்ட பாடல்கள் வாரிசு படத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேரு ஸ்டேடியத்திற்கு படையெடுப்பு
சென்னையில் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி வெளி ஊர்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏகப்பட்ட ரசிகர்கள் தங்கள் தளபதி தரிசனத்திற்காக சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தை நோக்கி காலையிலேயே படையெடுத்து விட்டனர். டிக்கெட் வாங்காத ரசிகர்களும் விஜய் காரில் வருவதையாவது பார்த்து விட வேண்டும் என நேரு ஸ்டேடியத்தின் வாசலிலேயே காலையிலிருந்து தவம் கிடக்கின்றனர்.
|
சென்னை வந்த ராஷ்மிகா
வாரிசு படத்தின் ஹீரோயின் நடிகை ராஷ்மிகா சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய வீடியோவும் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. வாரிசு படத்தில் மேலும், எந்த பிரபல செலிபிரிட்டி பங்கேற்க போகிறார் என்பது ரொம்பவே சஸ்பென்ஸாக உள்ளது. ரசிகர்களுடன் ராஷ்மிகா மந்தனா செல்ஃபி போட்டோக்களையும் எடுத்துக் கொண்டார்.
|
என் நெஞ்சில் குடியிருக்கும்
இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மைக்கை பிடித்து என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா நண்பிகளே என பேசும் அந்த ஒரு வார்த்தையை கேட்கத்தான் ரசிகர்கள் வெயிட்டிங் என காலை முதலே #என்நெஞ்சில்குடிஇருக்கும் ஹாஷ்டேக் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

ரசிகர்கள் எச்சரிக்கை
வாரிசு பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான டிக்கெட்டுகள் என போலியாக டிக்கெட் விற்பனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ரசிகர்கள் காசு கொடுத்து ஏமாந்து போக வேண்டாம் என்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.