ராஷ்மிகா மந்தனாவிடம் 2K கிட்ஸ் பண்ண சம்பவம்… 90ஸ் கிட்ஸ் ரசிகாஸ்லாம் ஓரமா போய் விளையாடுங்கப்பா…

மும்பை: தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார்.

அமிதாப் பச்சனுடன் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள 'குட்பை' திரைப்படம் அக்டோபர் 7ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், ரசிகரின் வினோதமான ஆசையை ராஷ்மிகா நிறைவேற்றிய வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

டோலிவுட்டில் டாப்

டோலிவுட்டில் டாப்

2016ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'கிரிக் பார்ட்டி' திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கிலும் நடிக்கத் தொடங்கினார். விஜய் தேவரகொண்டா ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த 'கீதா கோவிந்தம்' அவருக்கு மிகப்பெரிய அறிமுகம் கொடுத்தது. தொடர்ந்து தேவதாஸ், டியர் காம்ரேட் என வரிசைக் கட்டிய ராஷ்மிகா மந்தனாவுக்கு, கடந்தாண்டு வெளியான 'புஷ்பா' வேற லெவலில் மார்க்கெட்டை உயர்த்தியது. டோலிவுட்டைத் தொடர்ந்து அப்படியே கோலிவுட் பக்கமும் தடம் பதித்தார் ராஷ்மிகா.

பாலிவுட்டில் அறிமுகம்

பாலிவுட்டில் அறிமுகம்

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடித்திருந்தார் ராஷ்மிகா மந்தனா. தமிழில் 'சுல்தான்', தெலுங்கில் 'புஷ்பா' என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த ராஷ்மிகாவுக்கு விஜய்யுடன் 'வரிசு' படத்தில் நடிக்க ஜாக்பாட் கிடைத்தது. இந்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட ராஷ்மிகா, இப்போது விஜய்யுடன் டூயட் பாடி வருகிறார். அப்படியே பாலிவுட்டிலும் அமிதாப் பச்சனுடன் இணைந்து 'குட்பை' படத்திலும் நடித்துள்ளார் இந்தத் திரைப்படம் அக்டோபர் 7ம் தேதி வெளியாகிறது.

ராஷ்மிகாவை மடக்கிய ரசிகர்

ராஷ்மிகாவை மடக்கிய ரசிகர்

தமிழ், தெலுங்கு படங்களைத் தொடர்ந்து தற்போது இந்தியிலும் அறிமுகமாகும் ராஷ்மிகாவுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், மும்பையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஷ்மிகாவை மடக்கிய ரசிகர், அவரிடம் தனது வில்லத்தனமான ஆசையை கோரிக்கையாக முன்வைத்தார். முன்பெல்லாம் நடிகர்கள், நடிகைகளிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்குவது வழக்கம். ஆனால், இப்போது செல்போனில் செல்ஃபி எடுப்பதே மிகப் பெரிய லட்சியமாக உள்ளது. இந்நிலையில், இந்த இளம் ரசிகர் ராஷ்மிகா மந்தனாவிடம் ஆட்டோகிராப் கேட்டுள்ளார்.

அந்த இடத்தில் ஆட்டோகிராப்

அந்த இடத்தில் ஆட்டோகிராப்

ராஷ்மிகாவிடம் ஆட்டோகிராப் கேட்ட இளம் ரசிகர், அதை தனது மார்பில் இடவேண்டும் என குறும்புத்தனமாக கோரிக்கை வைத்துள்ளார். இதை எதிர்பார்க்காத ராஷ்மிகா முதலில் மறுத்தாலும், அந்த இளம் ரசிகர் கெஞ்சி கதறியதை பார்த்து, அவரது மார்பில் ஆட்டோகிராப் போட்டார். அப்போதும் ராஷ்மிகாவுக்கு நன்றி சொல்லும் விதமாக, அவரது கைகளைப் பற்றிக் கொண்டு நன்றி கூறி மகிழ்ந்தார். ராஷ்மிகாவும் அந்த ரசிகருக்கு டாட்டா காட்டி அங்கிருந்த சென்ற வீடியோ இப்போது ட்ரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X