அடுத்து சிம்புவை இயக்கும் இயக்குனர் யார் தெரியுமா?- வீடியோ
சென்னை: றெக்க பட இயக்குனர் ரத்தின சிவாவின் படத்தில் சிம்பு நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.
விஜய் சேதுபதியை வைத்து றெக்க படத்தை இயக்கிய ரத்தின சிவா சிம்புவை சந்தித்து பேசியுள்ளார். இதையடுத்து சிவா சிம்புவை வைத்து படம் எடுக்கப் போவதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது.
இதை பார்த்த சிவா விளக்கம் அளித்துள்ளார்.
சிம்பு
அண்ணனுக்காக காத்திருக்கிறேன். நட்பு ரீதியாக எஸ்டிஆரை சந்தித்து பேசினேன். என் தலைவனுடன் சேர்ந்து பணியாற்ற காத்திருக்கிறேன் என்று ரத்தின சிவா தெரிவித்துள்ளார்.
சமத்து
அஅஅ படம் வெளியான பிறகு சிம்பு மீது இயக்குனரும், தயாரிப்பாளரும் புகார் தெரிவித்தனர். சிம்பு பாத்ரூமில் இருந்து கொண்டு டப்பிங் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் தற்போது அவர் அப்படியே ஆளே மாறிவிட்டார்.
மணிரத்னம்
மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிக்கும் சிம்பு படக்குழுவை வியக்க வைத்துள்ளார். வழக்கமாக லேட்டாக ஷூட்டிங் வரும் சிம்பு தற்போது குறித்த நேரத்திற்கு முன்பே வந்துவிடுகிறாராம்.
வியப்பு
வம்பு பையனாக இருந்த சிம்பு தற்போது சமத்துப் பிள்ளையாக மாறியுள்ளதை பார்த்து கோலிவுட்காரர்கள் வியக்கிறார்கள். இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் தான் தெரியவில்லை.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.