Just In
- 52 min ago
நீங்கதான் ரியல் ஸ்டார்கள்.. பெண் போலீஸ் அதிகாரிகளை அப்படி பாராட்டிய நடிகை அனுஷ்கா!
- 1 hr ago
'பஹிரா' படபிடிப்பு முடிந்தது.. சம்மரில் ரிலீஸ்!
- 1 hr ago
வாவ்.. லாஸ்லியா, தர்ஷன் படத்துக்கு பூஜை போட்டாச்சு.. டைட்டிலே வித்தியாசமா இருக்கே.. ரசிகர்கள் குஷி!
- 1 hr ago
கையில் கோடாரியுடன் முரட்டு லுக்கில் அல்லு அர்ஜுன்.. 'புஷ்பா' ரிலீஸ் தேதி கெத்தாக அறிவிப்பு!
Don't Miss!
- News
செம எதிர்பார்ப்பு.. பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்.. எத்தனை மணிக்கு துவக்கம்? எப்படி பார்க்கலாம்?
- Finance
அம்பானிக்கு போட்டியாக களமிறங்கும் பிர்லா.. sabyasachi நிறுவனத்தின் 51% பங்குகளைக் கைப்பற்றல்..!
- Sports
முக்கிய வீரருக்கு கல்தா.. ஓரம்கட்டப்படும் பலர்.. சென்னையில் நடக்கும் முதல் டெஸ்ட்.. பிளேயிங் 11!?
- Automobiles
இந்தியாவில் புதிய பஸ், டிரக் மாடல்களை அறிமுகப்படுத்தியது பாரத் பென்ஸ்!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா?
- Lifestyle
இந்த ஒரு பொருள் மின்னல் வேகத்தில் எடையைக் குறைக்க உதவும் தெரியுமா? எப்படி சாப்பிடுவது?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நிவர் புயலுடன் ஜாலி ட்ரிப்.. இளம் இயக்குனர்களின் செல்பி அட்டகாசம்!
சென்னை : கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வரும் திரைப்படங்களில் ஒன்று விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர்.
மாஸ்டர் திரைப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற நிலையில் சமீபத்தில் இதன் டீசர் அனைவரின் புருவங்களையும் உயர்த்த வைத்தது.
இந்த நிலையில் திரையரங்குகள் தொடர்ந்து பல மாதங்களாக மூடப்பட்டு உள்ளதால் இதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டு, இப்பொழுது பாண்டிச்சேரி கடற்கரையில் புதுச்சேரி கச்சேரி என பாடல் பாடியவாறு இளம் இயக்குனருடன் ஜாலியாக சுற்றி வரும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வித்தியாசமான கதை
இளம் இயக்குனர்கள் வித்தியாசமான கதைக் களத்தின் மூலம் ரசிகர்களை மட்டுமல்லாமல் திரையுலகினர் பலரையும் பிரமிக்க வைத்து வரும் நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான மாநகரம் திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கைதி திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

மூன்றாவதாக மாஸ்டர்
தீபாவளிக்கு வெளியான கைதி திரைப்படம் வசூலில் சக்கைப் போடு போட்டு மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து இப்பொழுது மூன்றாவதாக மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

மாஸ்டர்
லோகேஷ் கனகராஜ், விஜய் இருவரும் இணைந்த இந்த மாஸ்டர் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே பலரிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் இதன் பாடல்கள் மற்றும் சமீபத்தில் வெளியிடப்பட்ட டீஸர் போன்றவைகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக
இதற்கிடையில் சூரரைப்போற்று, மூக்குத்தி அம்மன் என பெரிய திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்படாது திரையரங்குகள் திறந்த பின்னர் திரையில் மட்டுமே வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக கூறி இருந்தார்.

மாஸ்டர்ஸ் ஸ்பெஷல் செல்பி
கோலிவுட்டே மாஸ் திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மேயாதமான் பட புகழ் இயக்குனர் ரத்ன குமார் இருவரும் பாண்டிச்சேரி கடற்கரையில் செம ஜாலியாக சுற்றியவாறு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை " புதுச்சேரி கச்சேரி... நிவர் புயலுடன் ஒரு செல்பி" என்று தலைப்பிட்டு ரத்ன குமார் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவை கலக்கும் இரண்டு இளம் புயல்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட இந்த அற்புதமான மாஸ்டர்ஸ் ஸ்பெஷல் செல்பி இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.