»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

படத் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

சூர்யன், இந்தியன், குஷி, ரன் இதைத் தொடர்ந்து பாய்ஸ் படத்தைத் தயாரித்துள்ள பிரம்மாண்டத் தயாரிப்பாளர்ரத்னம். சாதாரண மேக் அப் மேனாக இருந்து இன்று ரூ. 25 கோடியில் ஷங்கரை வைத்து பாய்ஸ் படத்தை எடுத்துமுடித்துள்ளார்.

இன்று பாய்ஸ் படம் ரிலீசாகிறது. 260 பிரதிகள் போடப்பட்டு தமிழகம் தவிர உலக நாடுகள் முழுவதும் ஒரேநேரத்தில் ரிலீஸாகிறது இந்தப் படம். இதுவரை எந்தத் தமிழ் படத்துக்கும் இத்தனை பிரதிகள் போடப்பட்டதில்லை.

வெளிநாடுகளுக்கு 5 பிரதிகள் தான் போகும். இந்தப் படத்தின் 45 பிரதிகள் வெளிநாடுகளுக்கு ரிலீசுக்காகஅனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மகா பிரம்மாண்டமான செலவில் இந்தப் படம் உருவாகியுள்ள நிலையில் ரத்னத்தின் சென்னை வீட்டில் வருமானவரித்துறையினர் அதிரடியாய் நுழைந்து சோதனை நடத்தினர். படத்தின் வரவு செலவு குறித்து விவரங்களைஅதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil