»   »  பழம்பெரும் நடிகை ரத்னமாலா மரணம்

பழம்பெரும் நடிகை ரத்னமாலா மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

எம்.ஜிஆர், சிவாஜி படங்களில் நடித்தவரான பழம்பெரும் நடிகை ரத்னமாலா மரணமடைந்தார்.

இன்பக்கனவு என்ற படத்தில் எம்.ஜி.ஆருடனும், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாகவும் நடித்தவர் நடிகை ரத்னமாலா. பராசக்தி படத்திலும் சிவாஜியுடன் இணைந்து நடித்தவர்.

டி.ஆர். மகாலிங்கத்தின் ஓர் இரவு உள்ளிட்ட பல நாடகங்களிலும் நடித்துள்ளார். பல நடிகையருக்கு பின்னணியும் பாடியுள்ளார்.

நல்ல பாடகியான ரத்னமாலா, வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் பாடிய போகாதே போகாதே என் கணவா, பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என்ற பாடல் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமானது.

அதேபோல குல்லா போட்ட நவாப்பு, தந்தனா பாட்டு பாடுங்க, தந்தனா தாளம் கேளுங்க போன்ற பாடல்களும் வெகு பிரசித்தம்.

76 வயதான ரத்னமாலா சென்னை தியாகராய நகரில் வசித்து வந்தார். அவருக்கு லைலா என்ற மகள் மட்டும் உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த ரத்னமாலா வீட்டிலிருந்தபடி சிகிச்சை எடுத்து வந்தார்.

நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி ரத்னமாலா இறந்தார். இறந்த பின் கண்தானம் செய்யவேண்டும் என அவர் கூறியிருந்தார். அதன்படி அவருடைய கண்கள் தானமாக வழங்கப்பட்டன.

ரத்னமாலா உடலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், சங்கத் தலைவர் சரத்குமார், விஜயகுமார், நடிகைகள் மனோரமா, மஞ்சுளா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் மலரஞ்சலி செலுத்தினர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil