Don't Miss!
- News
தமிழுக்கு மாபெரும் "கவுரவம்".. ஹஜ் யாத்திரையின் அரஃபா உரையை தமிழிலும் மொழிபெயர்க்க சவூதி அரசு முடிவு
- Sports
இங்கிலாந்தை நாக் அவுட்டாக்கிய சிராஜ்.. பலமான நிலையில் இந்திய அணி.. வெற்றி வாய்ப்பு எப்படி?
- Finance
இட்லி விற்றவர் இன்று லட்சங்களில் வருமானம்.. சாதனை படைத்த தேன்மொழி..!
- Technology
முதல் மேட்-இன்-இந்தியா ஆட்டோனோமாஸ் விமானத்தை உருவாக்கி சோதனை! அதிகரிக்கும் தாக்குதல் சக்தி
- Automobiles
ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!
- Lifestyle
வார ராசிபலன் 03.06.2022-09.07.2022 - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ரவிதேஜாவுக்கு ஜோடியாக நடிக்கும் காந்த கண்ணழகி அனு இமானுவேல்!
சென்னை: தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக இருப்பவர் நடிகை அனு இமானுவேல்
தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது
3 டாப் ஹீரோ படங்களை தயாரிக்கும் இளையராஜா...எல்லாமே இதுக்கு தானா?
இந்த நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ராவணசூரா என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்

போலீஸ் அதிகாரியாக
பிரேமம் திரைப்படத்தின் மூலம் தமிழ் பெண்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகர் நிவின் பாலி மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்த ஆக்ஷன் ஹீரோ பிஜு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் செய்யப்பட்டார் நடிகை அனு இமானுவேல். அதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

கெஸ்ட் ரோல் போல
தமிழ் சினிமாவுக்கு துப்பறிவாளன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் பிரசன்னா ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் சில காட்சிகளில் மட்டுமே கெஸ்ட் ரோல் போல வந்து சென்றிருப்பார் எனவே ரசிகர்களால் பெருமளவு கவனிக்கப்படவில்லை.

பட்டிதொட்டியெங்கும் ரீச்சானார்
தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் கவனிக்கப்படாத அனு இமானுவேலுக்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்துகுடும்பப் படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளையில் கதாநாயகியாக நடித்து அதன் பின் படுஜோராக பட்டிதொட்டியெங்கும் படு ரீச்சானார் அனு இமானுவேல்.

நம்ம வீட்டுப் பிள்ளை
குடும்பங்கள் கொண்டாடும் மிகச்சிறந்த படமாக நம்ம வீட்டுப் பிள்ளை வெற்றி பெற்றது மேலும் இந்த படத்தில் நடிப்பு காமெடி சீன்ஸ் மற்றும் நடனம் என அனைவராலும் பாராட்டப்பட்டது இந்த படத்திற்கு பிறகு அனு இமானுவேலுக்கு தமிழிலும் தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது குறிப்பாக காந்த கண்ணழகி பாடல் இவரை உச்சத்துக்கு கூட்டிச் சென்றது

கவர்ச்சிக்கு மாறி வருகிறார்
தமிழில் நடித்த ஒரு சில திரைப்படங்களிலேயே இப்பொழுது பிரபலமான நடிகையாக மாறி உள்ள அனு இமானுவேலுக்கு தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்புகள் குவிகிறது. மேலும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் இருந்து இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சிக்கு மாறி வருகிறார்.

ராவணசூரா
இந்த நிலையில் மாஸ் மகாராஜா ரவிதேஜா ஹிரோவாக நடிக்கும் ராவணசூரா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவியின் முன்னிலையில் நடைபெற்றது. விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட இப்படத்தை இயக்குனர் சுதிர் வர்மா இயக்குகிறார். அதிரடி ஆக்சன் கதையில் உருவாகிவரும் ராவணசூரா படத்தில் அனு இமானுவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.