»   »  டான்ஸ்..டான்ஸ்: மும்பையில் நடந்த 'இந்தியா டான்ஸ் வீக்'

டான்ஸ்..டான்ஸ்: மும்பையில் நடந்த 'இந்தியா டான்ஸ் வீக்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் நடந்த இந்தியா டான்ஸ் வீக் நிகழ்ச்சியை பாலிவுட் நடிகை ரவீனா டான்டன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியின் இறுதியில் இந்தி நடிகர் டைகர் ஷ்ராப் நடனமாடினார்.

இந்தியாவின் பிரபல டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவரான சந்தீப் சொபர்கார் மும்பை கர்லா பகுதியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியுடன் சேர்ந்து கடந்த ஆண்டு இந்தியா டான்ஸ் வீக் நிகழ்ச்சியை துவங்கினார். இதையடுத்து இந்த ஆண்டுக்கான இந்தியா டான்ஸ் வீக் போட்டிகள் கடந்த 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் மும்பையில் நடைபெற்றது.

கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டு நிகழ்ச்சியும் பிரமாண்டமாக நடைபெற்றது.

ரவீனா டான்டன்

ரவீனா டான்டன்

பாலிவுட் நடிகை ரவீனா டான்டன் இந்தியா டான்ஸ் வீக் நடனப் போட்டி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அவர் கிஸி டிஸ்கோ மே ஜாயே என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடினார். பலவகையான நடனங்களை ஒரே மேடையில் பார்க்கும் வாய்ப்பை இந்தியா டான்ஸ் வீக் அளிப்பதாக ரவீனா தெரிவித்தார்.

ஸ்மைல்

ஸ்மைல்

இந்தியா டான்ஸ் வீக் நிகழ்ச்சியில் ஸ்மைல் பவுன்டேஷன் என்கிற என்ஜிஓவைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் டான்ஸ் மாஸ்டர் சந்தீப்புடன் சேர்ந்து நடனமாடினர். அவர்களின் நடனத்தை பார்த்த பார்வையாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

சந்தீப்

சந்தீப்

நிகழ்ச்சி குறித்து சந்தீப் கூறுகையில், இந்த ஆண்டு நிகழ்ச்சி சிறப்பாக நடந்துள்ளது. இந்த ஆண்டு இலங்கை மற்றும் திபெத்தில் இருந்து எல்லாம் போட்டியாளர்கள் வந்திருந்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியின் பிரமாண்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றார்.

டைகர் ஷ்ராப்

டைகர் ஷ்ராப்

பிரபல நடிகர் ஜாக்கி ஷ்ராபின் மகனும் பாலிவுட் நடிகருமான டைகர் ஷ்ராப் நிகழ்ச்சியின் இறுதியில் நடனமாடி பார்வையாளர்களை அசத்தினார். அவர் தான் நடித்த ஹீரோபன்டி பட பாடல்களுக்கு நடனம் ஆடினார்.

பரிசு

பரிசு

இந்தியா டான்ஸ் வீக்கில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சந்தீப் சொபர்கார் பால்ரூம் டான்ஸ் ஸ்டுடியோவில் ஓராண்டு இலவச நடன பயிற்சி, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், பாங்காக்கிற்கு இலவச பயண டிக்கெட் உள்ளிட்டவை பரிசாக அளிக்கப்பட்டது.

English summary
India dance week was held in Mumbai on april 25th and 26th. While actress Raveena Tandon kickstarted the programme, actor Tiger Shroff concluded it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil