Ravi Mohan: இப்பதான் ஏதோ நல்லது நடந்துச்சு.. அதுக்குள்ள இப்படியொரு சம்பவமா? தயாரிப்பாளராக ரவி மோகன் அவதி!

சென்னை: நடிகர் ரவி மோகன் சில வாரங்களுக்கு முன்னர் தனது பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இதன் விழா பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இதில் என்னவென்றால், தனது இயக்கத்தில் யோகி பாபு நடிக்க, ஆர்டினரி மேன் என்ற படத்தையும் தயாரித்து இயக்குகிறார். இதன் அறிவிப்பும் இவர் நடிக்கும் ப்ரோ கோட் படத்தின் அறிவிப்புகள் எல்லாம் வெளியானது. இந்நிலையில் அவரது சொகுசு பங்களாவை ஜப்தி செய்யப்போவதாக வங்கி நிர்வாகத்தின் தரப்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். ஜெயம் ரவி என மக்களால் அறியப்பட்ட இவர், கடந்த ஆண்டு தனது மனைவி ஆர்த்தியை விட்டு விலகிய பின்னர் ரவி மோகன் என தனது பெயரை மாற்றி வைத்துக் கொண்டார். இவரது நடிப்பில் அடுத்து கராத்தே பாபு, ஜீன் போன்ற படங்கள் வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களின் மீதும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக கராத்தே பாபு என்ற படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Ravi Mohan Not Paid More Than 10 Months EMI For ECR luxury Banglow Bank Put Up Japti notice

சொகுசு பங்களா: ரவி மோகனுக்கு சொந்தமான சொகுசு பங்களா சென்னை ஈ.சி.ஆர் சாலையில் உள்ளது. அந்த பங்களாவை வங்கியில் கடன் வாங்கி வாங்கியுள்ளார் போலத் தெரிகிறது. இப்படி இருக்கும்போது கடந்த 10 மாதங்களுக்கு மேலாக அந்த பங்களாவுக்கு தவணை செலுத்தாததால், வங்கி தரப்பில் இருந்து ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ரவி மோகன் தரப்பில் அந்த நோட்டீஸைப் பெற்றுக் கொள்ளாமல், வங்கியில் வந்து நேரடியாகவே பெற்றுக் கொள்வதாக தெரிவித்திருந்தார்கள். இவையெல்லாம் கடந்த மாதத்தில் நடைபெற்றது. ஆனால் இதுவரை ரவி மோகன் தரப்புக்கும் வங்கிக்கும் தவணை பிரச்னை தீர்க்கப்பட வில்லை போலத் தெரிகிறது. இப்படி இருக்கும்போது அவரது சொகுசு பங்களாவுக்கு வங்கி ஜப்தி நோட்டீஸ் ஒட்டியுள்ளது.

மாத தவணை: இந்த பிரச்னைகளுக்கு மத்தியில் தான் ரவி மோகன் தனது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இப்படி இருக்கும்போது, தனது சொகுசு பங்களா பிரச்னையை சரி செய்துவிட்டார் என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கையில், வங்கித் தரப்பில் இருந்து, சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இது தொடர்பான புகைப்படங்களும் வேகமாக பரவி வருகிறது. இந்த சொகுசு பங்களாவுக்கு ரவி மோகன் வருவது இல்லை என்பதால் அவரது அலுவலகத்தில் இந்த நோட்டீஸை ஒட்டவும் அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்தி நோட்டீஸ்: மேலும் இந்த சொகுசு பங்களாவில் தற்போது அவரது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகள் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. ரவி மோகன் இப்போதைக்கு கிட்டத்தட்ட ரூபாய் 8 கோடிகள் வரை வங்கிக்கு மாதாந்திர தவணையாக செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ரூபாய் 7.60 கோடிகள் செலுத்த வேண்டும் என்று அந்த ஜப்தி நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரவி மோகன் இந்த தொகையை செலுத்தினால், பங்களா அவரது கைவசம் இருக்கும், இல்லை என்றால் வங்கி பங்களாவை ஏலத்தில் விட்டுவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X