»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil
தலைப்பைப் பார்த்ததும், ஜெயம் படக் குழுவினரின் புதிய பட டைட்டில் என நினைத்து விடாதீர்கள். ஜெயம் ரவியின் அப்பாஎடிட்டர் மோகன், அண்ணன் ராஜா ஆகியோரின் லொள்ளுகளை குறிப்பிடுவதே மேலே உள்ள தலைப்பு. இனி விஷயத்துக்குவருவோம்.

ஒருகாலத்தில் சினிமா எடிட்டராக இருந்த மோகன், தெலுங்கில் படத் தயாரிப்பில் இறங்கி வெற்றிக் கொடி நாட்டினார்.

தமிழில் முதன் முதலில் அவர் தயாரித்த படம் தான் ஜெயம். அவரது மூத்த மகன் ராஜா இயக்க, இளைய மகன் ரவி நடிக்க, கதைஎன்னவோ வழக்கமானது தான் என்றாலும் பிரஷ்ஷாக இருந்த சதாவின் அழகு, அட்டகாச இசையால் படம் ஓட்டமாய் ஓடியது.இதில் பல கோடிகள் ஈட்டினார் மோகன். ரவியும் நன்றாக நடித்து பேர் வாங்கினார்.

இதனால் ஜெயம் "குடும்பத்தினருக்கு" கொஞ்சம் போல தலையில் வெயிட் ஏற ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து ரவி நடித்தஎம்.குமரன், சன் ஆப் மகாலட்சுமியும் நன்றாகவே ஓடவே, அவ்வளவுதான் அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான் என்பது போலவேதரைக்கு அரை அடி மேலேயை நடக்க ஆரம்பித்தார் ரவி.

இப்போது ரவியுடன் சேர்ந்து அவரது குடும்பத்தினரும் கோலிவுட்டில் மகா ஆட்டம் போட ஆரம்பித்துள்ளார்களாம்.

தெலுங்கில் பயங்கரமாக ஓடி வசூலை வாரிக் குவித்த வர்ஷம் படத்தை எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழில் மழை என்றபெயரில் தயாரித்து வருவது உங்களுக்குத் தெரியும். இதில் ரவி தான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்து வருகிறார்.

இங்கேதான் குழப்பம் ஆரம்பித்தது. படம் தொடங்கிய சில நாட்கள் வரை எஸ்.பி.பிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால்,கொஞ்சம் கொஞ்சமாக படத்துக்குள் மூக்கை நுழைக்க ஆரம்பித்திருக்கிறார் மோகன்.

முதலில் கதையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும், ரவியின் காஸ்ட்யூம் இன்னும் கொஞ்சம் பெட்டராக இருக்க வேண்டும்என்று ஆலோசனை சொல்லத் தொடங்கியிருக்கிறார்.

சரி, ஹீரோவின் அப்பாவாச்சே, இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தவராச்சே என்று எஸ்.பி.பியும் அதைபெரிதுபடுத்தவில்லை. ஆனால் இப்போது நிலைமை கையை மீறிப் போய்க் கொண்டிருக்கிறதாம்.

படத் தயாரிப்பு நிர்வாகம் முதற்கொண்டு அனைத்திலும் மோகன் தலையிட, ராஜாவும்இப்போது டைரக்ஷனில்குறுக்கிடுகிறாராம். இந்தக் காட்சியை இப்படி எடுங்கள், ரவிக்கு நிறைய பில்டப் கொடுங்கள் என்று அடிக்கடி டைரக்டரின்வேலையில் தலையிடுகிறாராம்.

தினமும் ஸ்கிரிப்டை வாங்கி செக் செய்து அதிலும் ஏகப்பட்ட மாற்றங்களை செய்து கொடுக்கிறாராம்.

இதனால் படத்தின் இயக்குனர் யார் என்பதில் யூனிட்டாருக்கே சந்தேகம் வந்து விடும் நிலை. இதனால் எஸ்.பி.பி.கடுப்பாகிவிட்டாராம்.

பணத்தைப் போட்டாகி விட்டது, பாதியில் படம் புட்டுக் கொண்டால் பிரச்சினையாகி விடும் என்பதால் அத்தனைஅட்டகாசத்தையும் பொறுத்துக் கொண்டு அமைதி காத்து வருகிறார் என்கிறார்கள்.

மேலும் எதற்கும் தயங்காத ஸ்ரேயாவே எரிச்சலாகும் அளவுக்கு அவருக்கு ஓவர் ஆடை குறைப்பு செய்யப்பட்டு வருகிறதாம்.

இதில் மட்டுமல்லாது, ரவி நடிக்கும் தாஸ் படத்தின் சூட்டிங்கிலும் மோகன்-ராஜா தலையிட்டு அந்த யூனிட்டாரையும்கடுப்படித்து வருகிறார்களாம்.

முதலில் இந்தப் படத்தின் பெயர் ராஸ்கல் என்று வைக்கப்பட்டிருந்தது. இயக்குனர் பாபு யோகேஸ்வரனைக் கூப்பிட்ட மோகன்,ராஸ்கல்னு பெயர் வச்சா என் மகனோட இமேஜ் கெடும்.

அதனால உடனே படத்தோட டைட்டிலை தாஸ் என்று மாற்றுமாறு நல்ல அட்வைஸ் கொடுத்துள்ளார். இந்த நல்ல காரியத்தோடுநின்றிருக்கலாம்.

வழக்கம் போல இந்தப் படத்திலும் தலையீட்டை தொடர்ந்து கொண்டுள்ளனராம் மோகனும் ராஜாவும்.

தாஸ் படத்தின் நாயகியான ரேணுகா மேனனை அடிக்கடி கூப்பிட்டு இப்படி நடி, அப்படி நடி என்று ராஜா ஒரு பக்கம் குறிப்புகள்கொடுக்கிறாராம்.

ரவி குடும்பத்தை கையில் போட்டுக் கொண்டால் மேலும் சினிமா வாய்ப்புக்களைப் பிடிக்கலாம் என்ற யோசனையில்இயக்குனரை விட்டுவிட்டு ரவியின் அண்ணனிடமே நடிப்பு டிப்ஸ் கேட்கிறாராம் மலையாளத்து வரவான ரேணுகா மேனன்.இதனால் தாஸ் படத்தின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் கடுப்பாகியிருக்கிறார்.

இவர்களின் லொள்ளு ஓவராகிக் கொண்டிருப்பதால் கோலிவுட்டில் அவர்களுக்கு எதிராக ஒரு குரூப் உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆப்பு வைக்க சரியான தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரவி சொல்றது சொல்லியாச்சு.. இனி உங்க சாமர்த்தியம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil