»   »  சென்னை 28-ல் கிரிக்கெட் ஆடப் போகும் அஸ்வின், முரளி விஜய்?

சென்னை 28-ல் கிரிக்கெட் ஆடப் போகும் அஸ்வின், முரளி விஜய்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வளர்ந்து வரும் 'சென்னை 28' படத்தின் 2ம் பாகத்தில் கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், முரளி விஜய் நடிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2007 ம் வெளியாகி ஹிட்டடித்த 'சென்னை 28' படத்தின் 2 வது பாகத்தை வெங்கட் பிரபு தற்போது கையிலெடுத்திருக்கிறார்.


முதல் பாகத்தில் நடித்த சிவா, நிதின் சத்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், விஜய் வசந்த் ஆகியோர் இப்பாகத்திலும் தொடர்கின்றனர்.


Ravichandran Ashwin, Murali Vijay Play a Cameo in Chennai 28 Sequel

அதேநேரம் 'சென்னை 28' ல் ரசிகர்களைக் கவர்ந்த ஜெய் இதில் நடிக்கவில்லை. ஜெய் இடம்பெறாத நிலையில் வைபவ் இப்படத்தில் உள்ளே வந்திருக்கிறார்.


இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், முரளி விஜய் இருவரையும் இப்படத்தில் நடிக்க வைக்க வெங்கட் பிரபு முயற்சித்து வருவதாக கூறுகின்றனர்.


முழுவதும் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் அஸ்வின், முரளி விஜய் நடிப்பது பொருத்தமாக இருக்கும் என்பது வெங்கட் பிரபுவின் எண்ணமாக உள்ளது.


எனவே இப்படத்தில் ஒரு காட்சி அல்லது பாடலுக்கு இருவரையும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைக்க அவர் முயற்சித்து வருகிறாராம்.தற்போது ஐபிஎல் போட்டிகள் நடப்பதால் இருவரும் பிஸியாக உள்ளனர்.


இதனால் ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின்னரே அஸ்வின், முரளி விஜய் இப்படத்தில் நடிப்பதை உறுதி செயமுடியும் என்ற சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.


அஸ்வின், முரளி விஜய் 'சென்னை 28' ல் கிரிக்கெட் ஆடுவார்களா? பார்க்கலாம்.

Read more about: chennai 28, சென்னை 28
English summary
Sources Said Cricket Players Ravichandran Ashwin and Murali Vijay Play a Cameo in Chennai 28 Sequel.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil