விஜே மகாலட்சுமியின் மாத வருமானம் இவ்வளவா? வாய் பிளந்த ரசிகர்கள்!
சென்னை: நடிகை விஜே மகாலட்சுமியின் மாத சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தொகுப்பாளினியும், நடிகையுமான விஜே மகாலட்சுமி ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில், தயாரிப்பாளர் ரவீந்திரனை திடீரென திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது, திருமணம் செப்டம்பர் 1ந் தேதி திருப்பதியில் மிகவும் எளிமையாக இருவரின் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றது.

திருமணம்
ரவீந்திரன் மற்றும் மகாலட்சுமி திருமணம் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து இருவரும் ஜோடியாக யூடியூப் சேனல் மற்றும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, எங்கள் திருமணத்தை இவ்வளவு பெரிய விஷயமாக பேசுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

உருவகேலி செய்தார்கள்
எங்கள் திருமணம் பணத்திற்காக நடந்தது, கட்டாயத் திருமணம் என பல தவறான செய்தி பரவியதால் நாங்கள், அதை தெளிவுப்படுத்த பேட்டி கொடுத்தோமே தவிர விளம்பரத்திற்காக இல்லை என்றனர். மேலும் என்னை என் உருவத்தை வைத்து பலர் கேலி செய்து பேசுகிறார்கள். என்னை உருவகேலி செய்வது இன்று, நேற்று நடக்கவில்லை பல வருடங்களாக என்னை கேலி செய்து வருகிறார்கள் அதை பற்றி எனக்கு கவலை என்றார்.

விதவிதமான போட்டோ
இதைத்தொடர்ந்து இந்த புதுமண தம்பதிகள் தல தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவருமே திருமணத்திற்கு பிறகு செல்லும் இடங்களில் எல்லாம் புகைப்படங்களை எடுத்து தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை கடுப்பாக்கி வருகின்றனர். விஜே மகாலட்சுமிக்கு கடந்த செப்டம்பர் மாதம் திருமணமான நிலையில் தற்போது இவர் கர்ப்பமாக இருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால், அந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

மாத சம்பளம்
இந்நிலையில் நடிகை மகாலட்சுமியின் மாத வருமானம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு பிரைம் டைம் சீரியல்களில் நடித்து வருகிறார். அதேபோல் இரண்டு படங்களிலும் கமிட்டாகி உள்ளார். இதன் மூலம் இவருக்கு மாத வருமானம் 3 முதல் 4 லட்சம் வரை வரும் என்று கூறப்படுகிறது. இவரின் சம்பளத்தை கேட்ட ரசிகர்கள் வாய்பிளந்து போனார்கள்.


Click it and Unblock the Notifications











