»   »  பளார் பளார்னு 24 முறை அறைந்த நடிகர்: கன்னம் சிவந்து நின்ற ஹீரோ

பளார் பளார்னு 24 முறை அறைந்த நடிகர்: கன்னம் சிவந்து நின்ற ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பத்மாவதி படப்பிடிப்பின்போது நடிகர் ராஸா முராத் ரன்வீர் சிங்கை 24 முறை கன்னத்தில் அறைந்துள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஷாஹித் கபூர் உள்ளிட்டோரை வைத்து பத்மாவதி படத்தை எடுத்து வருகிறார். படத்தில் தீபிரா ராணி பத்மினியாகவும், ரன்வீர் அலாவுத்தீன் கில்ஜியாகவும், ஷாஹித் கபூர் ராவல் ரத்தன் சிங்காகவும் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் ரன்வீர் சிங், ராஸா முராத் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியுள்ளார் பன்சாலி.

அறை

அறை

காட்சிப்படி ராஸா ரன்வீர் சிங்கை ஓங்கி கன்னத்தில் அறைய வேண்டும். அந்த காட்சி சரியாக வராமல் ராஸா 24 டேக்குகள் வாங்கியுள்ளார். அதாவது ரன்வீரை 24 முறை அறைந்துள்ளார்.

ரன்வீர்

ரன்வீர்

24 டேக்குகள் வாங்கிய பிறகே அறை சீன் ஓகே செய்யப்பட்டது. காட்சியை படமாக்கி முடித்தபோது ரன்வீர் சிங்கின் கன்னம் சிவந்து போயிருந்ததாம்.

இன்ஸ்டாகிராம்

24 முறை அறை வாங்கிய விஷயத்தை ரன்வீர் சிங் இன்ஸ்டாகிராமில் உறுதி செய்துள்ளார்.

பன்சாலி

பன்சாலி

பத்மாவதி படத்திற்கு ஏற்கனவே சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பன்சாலியை கூட அறைந்துள்ளன. இதையும் தாண்டி தான் அவர் படத்தை இயக்கி வருகிறார்.

English summary
Actor Raza Murad slapped Ranveer Singh 24 times while acting in a scene for Sanjay Leela Bhansali's upcoming movie Padmavati.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil