»   »  மொட்ட சிவா கெட்ட சிவா... ஆர்பி சௌத்ரிக்காக தலைப்பை விட்டுக் கொடுத்த வேந்தர் மூவீஸ்!

மொட்ட சிவா கெட்ட சிவா... ஆர்பி சௌத்ரிக்காக தலைப்பை விட்டுக் கொடுத்த வேந்தர் மூவீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆர் பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளது. ஜில்லா படத்துக்குப் பிறகு ராகவா லாரன்ஸை வைத்து புதிய படம் தயாரிக்கிறது இந்த நிறுவனம்.

இந்தப் படத்துக்கு மொட்ட சிவா கெட்ட சிவா என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்தத் தலைப்பு ஏற்கெனவே ராகவா லாரன்ஸ் இயக்க, வேந்தர் மூவீஸ் தயாரிக்கவிருந்த படத்தின் தலைப்பபுகளில் ஒன்று. தெலுங்கில் கல்யாண் ராம் நடித்து சூப்பர் ஹிட்டான 'பட்டாஸ்' படத்தின் ரீமேக் இது.

RB Chowdry's Motta Siva Ketta Siva

ராகவா லாரன்ஸ் நடிக்க வேந்தர் மூவீஸ் தயாரிக்க இருந்த 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தின் தலைப்பு பட்டாஸ் படத்தின் ரீமேக் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மற்றும் இயக்குனர் சாய்ரமணி கேட்டுக் கொண்டனர். எனவே வேந்தர் மூவீஸ் மதன் இந்தத் தலைப்பை விட்டுக் கொடுத்துவிட்டு வேறு தலைப்பை வைக்க உள்ளார்.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 87 வது படம் இது. உலகம் முழுவதும் வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வெளியிடுகிறார்.

முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். மற்றும் நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மற்றும் சதீஷ் , தம்பி ராமய்யா, மனோபாலா, கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

வசனத்தை ஜான் மகேந்திரன் எழுதுகிறார். நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரிஷ் இசையமைக்கிறார். திரைக்கதை அமைத்து இயக்குகிறார் - சாய்ரமணி . இவர் ஜீவா இரட்டை வேடங்களில் நடித்த சிங்கம் புலி படத்தை இயக்கியவர்.

படப்பிடிப்பு இம்மாதம் 18ஆம் சென்னையில் தொடவங்கி முப்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

English summary
RB Chowdry returns to movie production with Motta Siva Ketta Siva starring Raghava Lawrence in lead.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil