Don't Miss!
- News
இந்து மக்கள் கட்சியின் "சனாதன எழுச்சி பேரணி".. அனுமதிக்க முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
அடப்பாவிகளா, அனுஷ்காவை விவாகரத்து செய்யுமாறு கோஹ்லியிடம் கூறும் ரசிகர்கள்
Recommended Video

பெங்களூர்: அனுஷ்கா ராசியில்லாதவர் அதனால் அவரை விவாகரத்து செய்துவிடுங்கள் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்கள் கோஹ்லியிடம் தெரிவித்துள்ளனர்.
அனுஷ்கா சர்மா ஸ்டேடியத்திற்கு வந்தால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோல்வி அடைகிறது என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். அனுஷ்கா ராசியில்லாதவர் என்பதால் அந்த அணி தோல்வி அடைவதாக ரசிகர்கள் மூட நம்பிக்கை வைத்துள்ளனர்.
இந்த மூட நம்பிக்கையினால் பாவம் எதுவும் செய்யாத அனுஷ்காவை சமூக வலைதளங்களில் பெங்களூர் அணி ரசிகர்கள் திட்டுகிறார்கள்.

அனுஷ்கா
விராட் கோஹ்லி அனுஷ்காவை விவாகரத்து செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆர்டி செய்யுங்கள் என்று ஒருவர் ட்வீட்டியுள்ளார். பெங்களூர் அணி தோற்றால் அதற்கு அனுஷ்கா என்ன செய்வார் பாவம்.

காரணம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர் தோல்வி அடைய அனுஷ்கா சர்மா தான் காரணம் என்று நினைக்கிறேன் என்று ஒருவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்
அனுஷ்கா நீங்க எப்பொழுதெல்லாம் சின்னசாமி ஸ்டேடியத்திற்கு செல்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் ஆர்சிபி தோல்வி அடைகிறது. அவரை தனியாக விடுங்க என்று ஒருவர் கூறியுள்ளார்.

மூட நம்பிக்கை
மூட நம்பிக்கையின் உச்சம் இந்த ட்வீட். அனுஷ்கா ராசியில்லாதவர் என்று முத்திரை குத்தியுள்ளனர். கணவர் விளையாடுவதை நேரில் பார்க்க விரும்புவது தான் அனுஷ்கா செய்யும் குற்றம்.

ப்ளீஸ்
பெங்களூர் அணி விளையாடும் ஐபிஎல் போட்டிகளை காண நேரில் வராதீர்கள் என்று ஒருவர் அனுஷ்காவிடம் ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.