»   »  திலீப்புடன் ரியல் எஸ்டேட் பிரச்சனையா?: முதல் முறையாக உண்மையை சொன்ன பாவனா

திலீப்புடன் ரியல் எஸ்டேட் பிரச்சனையா?: முதல் முறையாக உண்மையை சொன்ன பாவனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: திலீப்புடன் பணப் பிரச்சனை என்று கூறப்படுவது குறித்து நடிகை பாவனா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகை பாவனாவை கடத்தி மானபங்கப்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக பாவனா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,

பேட்டி

பேட்டி

தொலைக்காட்சி சேனல்களுக்கு பேட்டி கொடுக்கும் மனநிலையில் நான் இல்லை. அதனால் தான் அறிக்கை வெளியிடுகிறேன். பிப்ரவரி 17ம் தேதி எனக்கு ஒரு அசம்பாவிதம் நடந்தது. இது குறித்து நான் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அந்த வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களாக நடந்தவற்றை பார்த்து நானும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். அந்த குறிப்பிட்ட நடிகருடன் சேர்ந்து நான் பல படங்களில் நடித்துள்ளேன். தனிப்பட்ட பிரச்சனை காரணமாக எங்களின் நட்பு முறிந்துவிட்டது.

நடிகர்

நடிகர்

மீடியா மற்றும் பிறர் மூலம் அந்த நடிகரின் கைது குறித்து கேள்விப்பட்டேன். அவருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதை அறிந்தேன். பொய்யாக இந்த வழக்கில் கோர்த்துவிடப்பட்டதாக அந்த நடிகர் நினைத்தால் உண்மை வெளியே வரட்டும். இல்லை அவர் தான் குற்றம் செய்திருந்தாலும் அந்த உண்மையும் வெளியே வரட்டும்.

சட்டம்

சட்டம்

சட்டத்திற்கு முன்பு அனைவரும் சரிசமம். அந்த நடிகருடன் எனக்கு எந்த ரியல் எஸ்டேட் டீலிங்கும் இல்லை. எனக்கும் அவருக்கும் இடையே பணம் உள்ளிட்ட எந்த டீலிங்கும் கிடையாது. இது தொடர்பாக எந்த ஆணவங்களையும் சமர்பிக்க நான் தயார். நான் ஃபேஸ்புக், ட்விட்டரில் இல்லை. என் பெயரில் வலம் வரும் வீடியோ உண்மை இல்லை என்றார் பாவனா.

English summary
Bhavana has released a statement saying that she doesn't have real estate dealings with actor Dileep.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil