»   »  ரொம்ப சாரி சாரி சாரி: மன்னிப்பு கேட்ட இயக்குனர் ராஜேஷ்

ரொம்ப சாரி சாரி சாரி: மன்னிப்பு கேட்ட இயக்குனர் ராஜேஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடவுள் இருக்கான் குமாரு படத்தின் மூலம் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என இயக்குனர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான கடவுள் இருக்கான் குமாரு படத்தில் அஜீத், விஜய், ஸ்ருதி ஹாஸன், லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி என ஏகத்திற்கும் கலாய்த்துள்ளனர்.


இந்நிலையில் இது குறித்து ராஜேஷ் கூறுகையில்,


தியேட்டர்

தியேட்டர்

கடவுள் இருக்கான் குமாரு படத்தை தியேட்டரில் பார்த்தால் ஜாலியாக சந்தோஷமாக இருக்கும். இந்த படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


ஸ்ருதி

ஸ்ருதி

இந்த படத்தில் யார் மனதையும் புண்புடுத்துவது எங்கள் நோக்கம் அல்ல. சிம்பு சாரையோ, ஸ்ருதி ஹாஸனையோ ஹர்ட் பண்ணனும்னு நினைக்கவில்லை.


சாரி சாரி

சாரி சாரி

இது ஒரு ஃபன் படம். யார் மனதையும் காயப்படுத்தும் எண்ணம் இல்லை. அப்படி இருந்தும் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் ரொம்ப சாரி சாரி சாரி.


இளைஞர்கள்

இளைஞர்கள்

கடவுள் இருக்கான் குமாரு படம் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. நான் அனைத்து விமர்சனங்களையும் எடுத்துக் கொள்வது இல்லை. ஏன் என்றால் விமர்சிப்பது எளிது. சினிமா படம் பண்ணுவது கடினம்.


English summary
Director Rajesh said that he is really sorry if his movie Kadavul Irukkan Kumaru hurts anybody.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil