»   »  கபாலியின் மனைவி ‘குமுதவள்ளியாக’ ராதிகா ஆப்தே மாறிய கதை தெரியுமா?

கபாலியின் மனைவி ‘குமுதவள்ளியாக’ ராதிகா ஆப்தே மாறிய கதை தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படத்தில் ரஜினியின் ஜோடியாக ராதிகா ஆப்தேவை நடிக்க வைத்ததற்காக காரணம் குறித்து மனம் திறந்துள்ளார் அப்பட இயக்குநர் ரஞ்சித்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி திரைப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வசூல் மழை பொழிந்து வருகிறது. இப்படத்தில் ரஜினியின் மனைவியாக குமுதவள்ளி என்ற கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே நடித்துள்ளார்.


படத்தில் அவரது கதாபாத்திரத்தின் அமைப்பும், அவரது நடிப்பும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.


ரஞ்சித் பேட்டி...

ரஞ்சித் பேட்டி...

இந்நிலையில், குமுதவள்ளி கதாபாத்திரத்திற்கு ராதிகா ஆப்தே தான் பொருத்தமாக இருப்பார் என தான் எவ்வாறு முடிவெடுத்தேன் என்பது குறித்து அப்பட இயக்குநர் ரஞ்சித் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
ரத்தசரித்திரம் காட்சி...

ரத்தசரித்திரம் காட்சி...

அதில் அவர், "ரத்த சரித்திரம் படத்தில் ஒரு காட்சியில் சிவப்பு நிற புடவையில், நெற்றியில் பொட்டு வைத்து அவ்வளவு அழகாக ராதிகா ஆப்தே நடித்திருப்பார். கபாலியில் குமுதவள்ளி என்ற கதாபாத்திரத்தைப் படைத்தவுடன் எனக்கு அந்த காட்சி தான் நினைவில் வந்து சென்றது.


ராதிகா ஆப்தே...

ராதிகா ஆப்தே...

ஆனபோதும், ராதிகா ஆப்தே தவிர இன்னொரு நடிகையின் பெயரும் ரஜினியின் ஜோடியாக ஆலோசிக்கப்பட்டது. ஆனால், பிறகு ராதிகா ஆப்தேவையே இறுதி செய்து விட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.


சர்ச்சை நாயகி...

சர்ச்சை நாயகி...

ஆபாச செல்பி, அனுராக் காஷ்யப் குறும்படத்தில் ஆபாசக் காட்சி என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கியவர் ராதிகா ஆப்தே. ஆனால், அந்த சர்ச்சைகள் முடிவடையும் முன்னரே ரஜினியின் நாயகியாக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


திருமணமானவர்...

திருமணமானவர்...

அதுமட்டுமின்றி திருமணத்திற்குப் பிறகு மீண்டும் நடிகைகள் சினிமாவில் நாயகிகளாக நடிப்பது அரிதிலும் அரிது. ஆனால், அதிலும் விதிவிலக்காக திருமணமான போதும் தொடர்ந்து தனது திறமையான நடிப்பால், குறும்படங்கள் மற்றும் சினிமாவில் நாயகியாக நடித்து முன்னணி நாயகிகளுள் ஒருவராக வலம் வருகிறார் ராதிகா ஆப்தே.


English summary
The Rajni starrer Kabali movie director Pa.Ranjith has revealed the reason behind choosing Radhika Apte for the film's female lead.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil