தளபதி 66 லிருந்து இவர மாத்திட்டாங்களா...ஏன் என்ன காரணம் ?

சென்னை : விஜய் நடிக்க உள்ள தளபதி 66 படத்தில் இருந்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய நபரை சத்தமே இல்லாமல் மாற்றி உள்ளனர். இந்த தகவல் தற்போது வெளியாகி, பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் விஜய்யின் பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் டிக்கெட் விற்பனை துவங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விட்டன.

தளபதி 66 துவங்கியாச்சு

தளபதி 66 துவங்கியாச்சு

இந்நிலையில் வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தின் ஷுட்டிங், பூஜையுடன் ஏப்ரல் 6 ம் தேதி துவங்கியது. இதன் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி செம வைரலாகின. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும், சரத்குமார் மற்றும் பிரகாஷ் ராஜ் முக்கிய ரோல்களில் நடிக்க உள்ளதும் உறுதியாகி உள்ளது.

சத்தமில்லாமல் நடந்த மாற்றம்

சத்தமில்லாமல் நடந்த மாற்றம்

பூஜை அன்று தளபதி 66 படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டது. இதில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக உள்ள தளபதி 66 படத்தில் தமிழ் வெர்சனுக்கு ஜோக்கர், குக்கூ படங்களின் மூலம் பிரபலமான ராஜு முருகன் திரைக்கதை மற்றும் வசனம் எழுத உள்ளதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது திரைக்கதை மற்றும் வசனங்களை விவேக் எழுத உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யார் இதற்கு காரணம்

யார் இதற்கு காரணம்

ராஜு முருகன், வம்சியின் மிக நெருங்கிய நண்பர். வம்சி ஏற்கனவே இயக்கிய தோழா படத்தில் அவர் பணியாற்றி உள்ளார். தளபதி 66 படத்திலும் ராஜு முருகன் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை சத்தமே இல்லாமல் மாற்றி விட்டனர். ஆனால் இதற்கு காரணம் தளபதி 66 டீம் இல்லையாம், ராஜு முருகன் தானாம்.

மாற்றத்திற்கு இதுதான் காரணமா

மாற்றத்திற்கு இதுதான் காரணமா

ராஜு முருகன், ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தியை வைத்து மெகா பட்ஜெட் படம் ஒன்றை இயக்க போகிறாராம். இன்னும் சில வாரங்களில் இந்த படத்தின் ஷுட்டிங் ஆரம்பமாக போகிறதாம். இந்த படத்தில் மற்றொரு ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்கிறாராம். பான் இந்தியன் படமாக இந்த படம் உருவாக்கப்பட உள்ளதாம். கொரோனா பரவலால் தளபதி 66 படம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் தனது சொந்த படத்தின் வேலைகளை கவனிப்பதற்காக தான் தளபதி 66 படத்தில் இருந்து ராஜு முருகன் விலகினாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X