Just In
- 21 min ago
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
- 33 min ago
மீண்டும் பிக் பாஸ் புரமோ போட்ட விஜய் டிவி.. என்ன மேட்டர்னு நீங்களே பாருங்க.. சர்ப்ரைஸ் இருக்கு!
- 51 min ago
குட்டி பவானிக்கு பிறந்தநாள்.. டிரெண்டாகும் #HBDMasterMahendran.. பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து!
- 1 hr ago
பத்தினின்னா செத்து நிரூபி.. சித்ராவை பாடாய் படுத்திய ஹேமந்த்.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
Don't Miss!
- Sports
மொத்த டீமும் ஆடிப்போய்விட்டது.. பயந்த பயிற்சி குழு.. வாஷிங்டன் சுந்தருக்கு இப்படி ஒரு பிரச்சனையா?
- News
திமுக ஆட்சிக்கு வந்தால்.. அதுதான் நடக்கும்... கோவையில் கொந்தளித்த முதல்வர்!
- Lifestyle
இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...!
- Automobiles
கரோக் எஸ்யூவி மீண்டும் இந்தியா வருகிறது... மிக சவாலான விலையில் களமிறக்க ஸ்கோடா திட்டம்!
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக்பாஸ் வீட்டில் இருந்து சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டது ஏன்? வெளியான பரபரப்பு தகவல்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கிய போது பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற போட்டியாளர்களில் ஒருவர் சனம் ஷெட்டி. மாடலாகவும் நடிகையாகவும் உள்ள சனம் ஷெட்டி 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
வலிக்குதா அன்னபூரணி அர்ச்சனா.. தம்பி மேல அன்பு இல்லையா? பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாளில் இருந்து தினமும் ஒரு பிரச்சனையில் சிக்கி வந்தார். சக போட்டியாளரான பாலாஜியிடமும் அவருக்கு ஏழாம் பொருத்தமாய் இருந்தது.

எரிச்சலாக்கிய சனம்
எல்லாத்துக்கும் வாக்குவாதம் செய்த சனம் ஷெட்டி மீது ஒரு கட்டத்தில் ரசிகர்கள் கடும் எரிச்சலாகினர். சனம் ஷெட்டியை வெளியேற்ற வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வந்தனர். காடா நாடா டாஸ்க்கின் போது சுரேஷ் சக்கரவர்த்தி விளையாட்டாய் செய்ததை சீரியஸாக எடுத்துக்கொண்டார் சனம்.

இங்கீதம் இழந்த சனம்
அதற்காக அவரது வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் அவனே இவனே என்றும் போடா வாடா என்றும் தரக்குறைவாக பேசினார். இதானால் சனம் ஷெட்டி மீதான கோபம் அதிகமானது. இதுகுறித்து விசாரித்த கமல் இங்கீதத்தை இழந்து விட்டீற்கள் சனம் என்று விளாசினார்.

பாலாஜி பேச்சு
மேலும் சுரேஷை திட்டுவதற்கு வேல்முருகனுடன் சனம் ஷெட்டி ரிகர்சல் பார்த்ததையும் போட்டுடைத்தார் கமல். இதனால் அவர் மீதான வெறுப்பு அதிகரித்தது. இருந்த போதும் பாலாஜி அவரை தரக்குறைவாக பேசியதும் திட்டியதும் அவர் மீதான வெறுப்பை பாலாஜி பக்கம் திருப்பியது.

சனம் எவிக்ஷன்
பாலாஜியை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. என்னதான் வாக்குவாதம் சண்டை என்று இருந்தாலும் தனக்கான டாஸ்க்கை சிறப்பாக செய்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டார்.

அதிருப்தி
சனம் ஷெட்டியின் வெளியேற்றம் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இன்டிவிட்ஜுவல் பிளேயரான சனம் ஷெட்டி எவிக்ட்டானதால் ஹவுஸ்மேட்ஸும் அதிருப்தியில் உள்ளனர். ஏற்கனவே சுரேஷ் சக்கரவர்த்தி வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படவில்லை. அதை கமலே ஒப்புக்கொண்டார்.

எவிக்ஷனுக்கான காரணம்
அதன்பிறகு வெளியான சுச்சியும் வேறு சில காரணங்களால்தான் வெளியேற்றப்பட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சனம் ஷெட்டி வெளியேற்றத்திற்கான காரணமும் வெளியாகியுள்ளது. அதாவது வரும் சனிக்கிழமை சனம் ஷெட்டி ஒரு அழகிப் போட்டி ஈவன்ட்டில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

வைரலாகும் இன்விடேஷன்
இதற்காகவே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சனம் ஷெட்டி பங்கேற்கும் அந்த ஈவன்ட்டின் இன்விடேஷன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் சனம் ஷெட்டிதான் ஸ்பெஷல் கெஸ்ட் என்றும் கூறப்படுகிறது.