ஐஸ்வர்யா ராய் குடும்பத்தை சந்தித்த வரலட்சுமி...பின்னணி காரணம் என்னன்னு தெரியுமா ?
புதுச்சேரி : மணிரத்னம் இயக்கம் பொன்னியின் செல்வன் படத்தின் ஷுட்டிங், சமீபத்தில் புதுச்சேரியில் துவங்கி நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு ஷுட்டிங் துவங்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு ஷுட்டிங் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படக்குழுவில் உள்ள 23 டெக்னீஷியன்களுக்கு செட்டிலேயே தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

இவ்வளவு பேரா நடிக்கிறார்கள்
இரண்டு பாகங்களாக தயாராகி வரும் பொன்னியின் செல்வனின் முதல் பாகம் 2022 ல் வெளியாக உள்ளது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா துலிபலா, பிரபு, சரத்குமார், ஜெயராம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், ஜெயசித்ரா, விக்ரம் பிரபு, அஸ்வின் காகுமனு, விஜய் யேசுதாஸ், லால், நாசர், கிஷோர், நிழல்கள் ரவி, ரியாஸ் கான், மோகன் ராம், அர்ஜுன் சிதம்பரம், வினோதினி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்

ஐஸ்வர்யா ராயை சந்தித்த வரலட்சுமி
இந்த படத்தில் சரத்குமார் முக்கிய ரோலில் நடிக்கிறார். புதுச்சேரியில் ஷுட்டிங்கில் இருக்கும் சரத்குமாரை பார்ப்பதற்காக அவரின் மகள்களான வரலட்சுமியும், பூஜாவும் புதுச்சேரி சென்றுள்ளனர். அங்கு ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராதியாவை சந்தித்துள்ளனர்.

ஃபோட்டோ வெளியிட்ட வரலட்சுமி
இந்த தகவலை சந்தோஷம் பொங்க இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள வரலட்சுமி, இந்த சந்திப்பின் போது ஐஸ்வர்யா ராய் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களையும் பகிர்ந்துள்ளார்.

பூஜா அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை
ஐஸ்வர்யா ராயை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்த தனது தந்தை சரத்குமாருக்கும் நன்றி தெரிவித்துள்ள வரலட்சுமி, தனது சகோதரி பூஜா இன்னும் அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

ஐஸ்வர்யா ராய் இவருக்கு ஜோடியா
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதில் ஒன்று பெரிய பழுவீட்டரையாரின் மனைவியான நந்தினி கேரக்டர். இது வில்லி கேரக்டர். பெரிய பழுவீட்டரையாராக சரத்குமார் நடிக்கிறாராம். அதாவது கதைப்படி சரத்குமாரின் மனைவியாக தான் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாராம்.

ஓ...சந்திப்பிற்கு இதுதான் காரணமா
படத்தில் தனக்கு ஜோடியாக நடிப்பவர் என்ற முறையில் சரத்குமாருக்கு ரொம்ப நெருக்கமானவர் ஆகிவிட்டார் ஐஸ்வர்யா ராய். அதனால் தான் மகள்களை அழைத்துச் சென்று ஐஸ்வர்யா ராய் குடும்பத்தை சந்திக்க வைத்துள்ளார் சரத்குமார்.


Click it and Unblock the Notifications











