Don't Miss!
- News
இந்து மக்கள் கட்சியின் "சனாதன எழுச்சி பேரணி".. அனுமதிக்க முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
நாக சைத்தன்யாவின் ஜீவனாம்சத்தை வேணாம்னு சொன்ன சமந்தா... என்ன காரணம்... அவரே சொல்லியிருக்காரு!
சென்னை : நடிகை சமந்தா சமீபத்தில் நாக சைத்தன்யாவுடன் பிரியும் முடிவை அறிவித்தார். இருவரும் இணைந்தே இந்த முடிவை வெளியிட்டனர். இதையடுத்து திரைத்துறையினர் அனைவரும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதையடுத்து நாக சைத்தன்யா என்ன ஜீவனாம்சம் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பையும் சமந்தா தவிடுபொடியாக்கினார்.
கதீஜாவுக்கு
கிடைத்த
வரவேற்பு..
சமந்தா
செம
ஹேப்பி
வீடியோ..
2ம்
நாள்
வசூல்
எவ்வளவு
தெரியுமா?

நடிகை சமந்தா
நடிகர் நாகசைத்தன்யா மற்றும் சமந்தா இருவரும் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ல் திருமணம் செய்துக் கொண்டனர். நான்கு ஆண்டுகள் நீடித்தது இந்த திருமண வாழ்க்கை. ஆனால் உள்ளுக்குள் புகைந்துக் கொண்டிருந்தது என்று தகவல்கள் வெளியான வண்ணம்தான் இருந்தன.

உறுதியான விவாகரத்து
இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக மாதக்கணக்கில் தகவல்கள் வெளியாகின. இருவரும் அதை ஒப்புக் கொள்ளவும் இல்லை மாறாக மறுக்கவும் இல்லை. இதையடுத்து இந்தத் தகவல் உண்மைதான் என்ற தகவலும் உறுதியாகியது. ஆனால் இதை இருவரும் கடந்த ஆண்டில் உறுதிப்படுத்தினர்.

பிரிவை சந்தித்த ஜோடி
இருவரும் இணைந்து விவாகரத்து முடிவை வெளியிட்டனர். தொடர்ந்து சிறப்பான ஜோடியாக கருதப்பட்ட இந்த ஜோடியும் பிரிவையே சந்தித்தது. ஆனாலும் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் குடும்பத்தினர் மட்டுமின்றி மற்றவர்களும் ஈடுபட்டனர். ரசிகர்களும் இதையே எதிர்பார்த்தனர்.

உறுதியான தம்பதி
ஆனால் இவர்களின் எந்த முயற்சிக்கும் இடம்கொடுக்காமல் தங்களது பிரிவு முடிவில் இருவரும் உறுதியாகவே இருந்தனர். இதையடுத்து நாக சைத்தன்யா எவ்வளவு ஜீவனாம்சம் கொடுப்பார் என்று கேள்வி எழுந்தது. அவரது தரப்பில் 200 கோடி ரூபாய் தருவதற்கு தயார் என்று கூறப்பட்டதாகவும் ஆனால் சமந்தா அதை மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

சிறப்பான நடிப்பு
இதனிடையே தொடர்ந்து தன்னுடைய கேரியரில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார் சமந்தா. நேற்று முன்தினம் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் கதீஜாவாக நடிப்பில் அனைவரையும் பின்தள்ளி ஸ்கோர் செய்துள்ளார். தொடர்ந்து அவரது யசோதா உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

ஜீவனாம்ச மறுப்புக்கு காரணம்
இந்நிலையில் சமந்தா ஜீவனாம்சம் வேண்டாம் என்று கூறியதற்கு காரணத்தை தற்போது அவர் வெளிப்படுத்தியுள்ளார். சமந்தாவும் நாகசைத்தன்யாவும் ஒரே படத்தில் அறிமுகமானாலும் தற்போது சமந்தாவின் சொத்து மதிப்பு 84 கோடி ரூபாய் எனவும் நாக சைத்தன்யாவின் சொத்து மதிப்பு 38 கோடி எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

84 கோடி ரூபாய்க்கு சொத்து
சமந்தாவின் பெயரில் ஐதராபாத்தில் வீடுகள் மற்றும் நிலங்கள் உள்ளதாகவும் பிரிவுக்கு முன்னதாக சமந்தாவின் வீட்டில்தான் நாக சைத்தன்யா வாழ்ந்து வந்ததாகவும் பிரிவு முடிவுக்கு பிறகு அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியிலும் அதிகமாக கமிட்டாகிவருவதால் மும்பையில் வீடு வாங்கி செட்டில் ஆக சமந்தா முடிவு செய்துள்ளாராம்.

அதிகமான சொத்து மதிப்பு
சமந்தா 3 கார்களை வைத்துள்ள நிலையில் 2 கார்கள் பிஎம்டபள்யூ மற்றும் ஒன்று ஜாக்குவார். அவரது அடுத்தடுத்த படங்களின் குறிப்பாக பேமிலி மேன் 2 தொடரின் வெற்றியை அடுத்து அவர் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளார். இதனிடையே நாகசைத்தன்யாவை காட்டிலும் தன்னிடம் அதிகமாக சொத்துக்கள் உள்ளதாலேயே சமந்தா அவரிடம் ஜீவனாம்சம் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.