ஜென்டில்மேன் கமல் நடிக்க வேண்டிய படமா?...அவர் நோ சொல்ல இது தான் காரணமா?

சென்னை : இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் வாங்கிய டைரக்டர் ஷங்கர், இயக்குநகராக அறிமுகமான படம் 1993 ல் ரிலீசான ஜென்டில்மேன். கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார்.

Recommended Video

ஜென்டில்மேன் கமல் நடிக்க வேண்டிய படமா?...அவர் நோ சொல்ல இது தான் காரணமா?

ஆக்ஷன் கிங் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், நம்பியார், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் 175 நாட்கள் ஓடி செம ஹிட் ஆனது. பல விருதுகளையும் வென்றது.

ஜென்டில்மேன் படம் 1994 ம் ஆண்டு இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஜென்டிமேன் படம் ரிலீசாகி 30 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்.

 விரைவில் இந்தியன் 2

விரைவில் இந்தியன் 2

அதற்கு பிறகு ரஜினி, கமல், விஜய், விக்ரம் என பல டாப் ஹீரோக்களை வைத்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து விட்டார் ஷங்கர். தற்போது கமல் நடிக்கும் இந்தியன் 2, ராம்சரண் நடிக்கும் ஆர்சி 15 படங்களை இயக்கி வருகிறார். 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் செப்டம்பர் மாதம் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜென்டில்மேனுக்கு நோ சொன்ன கமல்

ஜென்டில்மேனுக்கு நோ சொன்ன கமல்

இந்த சமயத்தில் கமல், ஜென்டில்மேன் பற்றி பேசிய பழைய வீடியோ ஒன்று செம வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் கமல், ஜென்டில்மேன் படத்திற்காக ஷங்கர் என்னிடம் வந்து கதை சொன்ன போது, அது பிராமண குலத்தை சேர்ந்த இளைஞனின் போர்குணத்தை காட்டுவதாக இருந்தது. அதனால் தான் அதில் நடிக்க முடியாது என சொல்லி விட்டேன் என தெரிவித்துள்ளார்.

இது புது தகவலா இருக்கே

இது புது தகவலா இருக்கே

ஜென்டில்மேன் படத்திற்காக ஷங்கர் முதலில் கதை சொன்னது கமலிடம் தான் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் எதற்காக கமல் அந்த படத்தில் நடிக்க மறுத்தார் என்ற காரணத்தை அவரை சொன்ன வீடியோ பலருக்கும் ஆச்சரிய தகவலாக அமைந்துள்ளது. ஜென்டில்மேன் படத்தில் நடிக்க மறுத்தாலும், மற்றொரு கதையுடன் வாருங்கள். நிச்சயமாக இருவரும் இணைந்து படம் பண்ணலாம் என ஷங்கரிடம் தெரிவித்துள்ளார் கமல். ஜென்டில்மேன் படத்திற்காக ஷங்கர் கதை சொன்ன சமயத்தில் கமல், மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் தான் அவர் நோ சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.

ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சே

ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சே

இதே போல் முதல்வன் படத்திற்காக ஷங்கர் முதலில் ரஜினியிடம் தான் கதை சொல்லி உள்ளார். அவர் நோ சொன்னதா் கமலிடம் சொல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் கமல் அந்த சமயத்தில் ஹேராம் படத்தில் பிஸியாக இருந்ததால் ஓராண்டு காத்திருக்கும் படி ஷங்கரிடம் சொல்லி உள்ளார். ஆனால் ஒரு வருடம் காத்திருக்க விரும்பாமல் தான் அர்ஜுனை வைத்து முதல்வன் படத்தை இயக்கினார். ஒரு வேளை முதல்வன் பட கதையில் ரஜினியோ, கமலோ நடித்திருந்தால் ஷங்கருக்கு அது மிகப் பெரிய வரலாற்று வெற்றியை கொடுத்திருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X