»   »  நடிகர் ராணாவுக்கு வலது கண்ணில் பார்வை எப்படி பறிபோனது தெரியுமா?

நடிகர் ராணாவுக்கு வலது கண்ணில் பார்வை எப்படி பறிபோனது தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகர் ராணாவுக்கு வலது கண்ணில் பார்வை எப்படி போனது என்பது தெரிய வந்துள்ளது.

பாகுபலி மற்றும் பாகுபலி 2 படத்தில் மகிஷ்மதியின் கெட்ட ராஜாவாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டு பெற்றுள்ளவர் ராணா. பாகுபலிக்காக பிரபாஸை போன்றே உடம்பை ஏற்றி முரட்டுத்தனமாக காட்சியளித்தார் ராணா.

அவருக்கு வலது கண்ணில் பார்வை இல்லை என்பது அறிந்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டிவி நிகழ்ச்சி

டிவி நிகழ்ச்சி

தெலுங்கு தொலைக்காட்சி சேனலில் லட்சுமி மஞ்சு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராணா தனக்கு வலது கண்ணில் பார்வை இல்லை என்றார். அந்த நிகழ்ச்சியின் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

ராணா

ராணா

பிறவியிலேயே கருவிழியில் குறைபாடு இருந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கண் தானம் பெற்று எனக்கு அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் அப்படியும் பார்வை கிடைக்கவில்லை என்று ராணா தற்போது கூறியுள்ளார்.

வலது கண்

வலது கண்

அறுவை சிகிச்சைக்கு பிறகும் எனக்கு வலது கண்ணில் பார்வை இல்லை. வலது கண் மூலம் நிறங்களை மட்டும் பார்க்க முடியும். மற்றபடி எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார் ராணா.

நலம்

நலம்

எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் ஃபிட்டாக, நலமாக உள்ளேன் என்பதையும் தயவு செய்து எழுதுங்கள் என ஆங்கில பத்திரிகை ஒன்றிடம் கூறியுள்ளார் ராணா.

English summary
Actor Rana has revealed the reason for the blindness in his right eye. It is noted that the Baahubali actor is an inspiration to many.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil