»   »  சவுந்தர்யா ரஜினிகாந்த் தன் கணவரை பிரிய காரணம் இது தானாம்!

சவுந்தர்யா ரஜினிகாந்த் தன் கணவரை பிரிய காரணம் இது தானாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தனது கணவரை பிரிந்து வாழ்வதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தனது காதல் கணவர் அஷ்வினை பிரிந்து வாழ்கிறார். கடந்த ஓராண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.

Reason for Soundarya Rajinikanth separated from hubby is revealed

இந்நிலையில் அவர்கள் பிரிந்ததற்கான காரணத்தை அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

சவுந்தர்யா, அஷ்வின் இடையே காதல் இல்லாமல் போனது. இதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்துக் கூட பேசாமல் இருந்தனர். இனியும் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டதால் பிரிந்துவிட்டனர்.

அவர்கள் நான்கு ஆண்டுகள் காதலித்தபோதிலும் ஏதோ கல்யாணம் செய்ய வேண்டுமே என்பதற்காக செய்தனர் என்றார்.

English summary
According to a source, loss of love is the reason for Soundharya Rajinikanth getting separated from her husband Ashwin.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil