twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தயாரிப்பாளர்கள் - டிஜிட்டல் நிறுவனங்கள் மோதல் காரணம் என்ன?

    By Shankar
    |

    Recommended Video

    தென்னிந்திய திரையுலகம் ஸ்ட்ரைக் அறிவிப்பு மார்ச் 1-ம் தேதி முதல் | Filmibeat Tamil

    பலம் கொண்ட யானையை சிறு அங்குசம் மூலம் யானைப்பாகன் கட்டுப்படுத்துவது போல், கோடிக்கணக்கில் முதலீடு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர், அதனை விலை கொடுத்து, வாங்கும் விநியோகஸ்தர்களை கட்டுப்படுத்தும் கருவியாக டிஜிட்டல் நிறுவனங்கள் செயல்படுகின்றன என்ற குமுறல் பல வருடங்களாக இருந்து வந்தது.

    நமது தயாரிப்பை திரையரங்குகளில் எப்போது, எப்படி, என்ன கட்டணத்தில் திரையிடுவது என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும் என கூறும் தயாரிப்பாளர்கள் நேற்று முதல் தென் இந்தியா முழுவதும் புதியபடங்களை திரையிடுவதில்லை என அறிவித்து அமுல் படுத்தி உள்ளளனர்.

    Reasons behind Producers Vs Digital service providers

    தமிழ் படங்கள் இன்று எதுவும் ரீலீஸ் ஆகவில்லை. ஏற்கனவே ஓடிக் கொண்டிருந்த பழைய படங்களையும் நிறுத்தி தியேட்டர்களை மூடியுள்ளனர் ஆந்திர மாநில சினிமா தயாரிப்பாளர்கள். கர்நாடகா, கேரள மாநிலங்கள் புதிய படங்களை ரிலீஸ் செய்யவில்லை என்பதுடன் மார்ச் 9 முதல் தியேட்டர்களை மூட உள்ளதாக அறிவித்து உள்ளனர்.

    இந்த முடிவுக்கு தமிழ்திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து உள்ளது.

    தியேட்டர்கள் வசூல் குறைந்து இருந்தபோது பிரிண்ட் செலவைக் கட்டுப்படுத்த, டிஜிட்டல் முறையில் படங்களைத் திரையிட நவீன புரஜக்டர்களை நாங்கள் குறைந்த விலையில் தருகிறோம். ஒலி, ஒளி அமைப்பு சிறப்பாக இருக்கும் என 2005ல் டிஜிட்டல் நிறுவனங்கள் கொடுத்த வாக்குறுதியை பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் ஆதரித்தனர்.

    பிரிண்ட் முறையில் 50 முதல் 100 தியேட்டர்கள் வரை தயாரிப்பாளரின் வசதி, பட வியாபாரத்தை பொறுத்து படங்கள் ரீலீஸ் ஆகிக் கொண்டிருந்தன.

    டிஜிட்டல் முறையில் ஒரு தியேட்டருக்கு அறிமுகமானபோது கட்டணம் 6800 ரூபாய் மட்டுமே. (ஒரு பிரிண்ட் விலை 80,000 ம் முதல் ஒரு லட்சம் வரை செலவானது) ஒரு பிரிண்ட்டுக்கு ஆகும் செலவில் 15 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முடிந்தது.

    பிரிண்ட் சேதாரமானால் புதிய பிரிண்ட் போட வேண்டும். டிஜிட்டல் முறையில் காலதாமதம், சேதாரம் கிடையாது, இரண்டாவது மூன்றாவது வாரங்களில் கட்டணம் குறைந்து கொண்டே வரும். பிரிண்டை போல பாதுகாக்க வேண்டியதில்லை.

    இதனால் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை ஏற்க மறுத்தவர்களை தயாரிப்பாளர்கள் சம்மதிக்க வைத்தனர்.

    குறிப்பிட்ட அளவு தியேட்டர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த டிஜிட்டல் நிறுவனங்கள் முதற்கட்டமாக வெளிவர உள்ள படங்களின் டிரைலரை படம் தொடங்கும் முன் தியேட்டர்களில் வெளியிடும் வேலையைச் செய்தது.

    அதற்கு தயாரிப்பாளர்களிடம் கட்டணம் வசூலித்தனர். அதில் பங்கு கேட்ட தியேட்டர்காரர்களிடம் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள புரொஜக்டர், பல்பு ஆகியவற்றுக்கு இது போன்ற விளம்பர வருவாய் மூலம் செலவை ஈடுகட்ட வேண்டியுள்ளது என கூறிச் சமாளித்தனர்.

    அப்போதே அது பற்றி யோசிக்க வேண்டிய தியேட்டர் உரிமையாளர்கள் நம்மிடம் பணம் கேட்காமல் என்ன வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளட்டும் என மெளனம் காத்தனர்.

    தங்கள் படங்கள் ரிலீஸ் செய்யும்போது பிற ட்ரைலர்களை வெளியிட்டு டிஜிட்டல் நிறுவனங்கள் சம்பாதிப்பதை இரு தரப்பும் தொலைநோக்கு பார்வையுடன் அணுகாததன் விளைவு, படங்கள் திரையிடுவதையும் படங்கள் சேமித்து வைக்கும் சேமிப்பு வங்கியாக டிஜிட்டல் நிறுவனங்கள் மாறத் தொடங்கின.

    தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள். தியேட்டர் உரிமையாளர்கள் வசம் பாதுகாப்பாக இருந்த 'கண்டென்ட்' டிஜிட்டல் நிறுவனங்கள் கட்டுப்பாட்டுக்குள் போனது முதல் சறுக்கலாக அமைந்தது.

    விஸ்வரூபமாக தாங்கள் இல்லை என்றால் சினிமா திரையிடுவது இயலாதது என்ற ஆணவப்போக்குடன் டிஜிட்டல் நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்க மறுத்து வருகின்றன என்கிறார் சேலம் திரைப்பட விநியோகஸ்தர்.

    உலகமயமாக்கல், விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிசியில் அனைத்து பொருட்களும் விலைக் குறைந்து வருகின்றன. டிக்கட் கட்டணங்களை குறைக்க வேண்டும் என கூறும் தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் முறையில் படங்கள் திரையிடும் கட்டணத்தை அதிகப்படுத்த அனுமதித்தது தவறு என்கிறார் திருமங்கலம் ஆனந்தா தியேட்டர் குத்தகைதாரர் நாகராஜ்.

    தயாரிப்பாளர்களே ஒரு நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளர்களே டிஜிட்டல் முறையில் படங்களைத் திரையிடும் முயற்சியில் பல புதிய நிறுவனங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தை அணுக தொடங்கியுள்ளன.

    அதே நேரம் வேலை நிறுத்தத்தை முறியடிக்கவும், புதிய நிறுவனங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் கால் பதிக்க விடாமல் தடுக்கும் முயற்சியில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் கியூப், UFO நிறுவனங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும், திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியிலும் சில கறுப்பு ஆடுகளை தயார் செய்து வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

    தயாரிப்பாளர்கள் - டிஜிட்டல் நிறுவனங்கள் மோதல் ஏன், பின்னணி என்ன... அடுத்த கட்டுரையில்!

    English summary
    Here are the reasons behind Producers Vs Digital service providers
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X