நாளை திரையரங்கில் வெளியாகும் ‘கலகத் தலைவன்‘..இந்த காரணத்திற்காக நீங்கள் படம் பார்க்கலாம்!
சென்னை : தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால், பிக் பாஸ் ஆரவ் வில்லனாக மிரட்டி உள்ளார்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்திருக்கும், இப்படம் நாளை திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தை பார்க்க வேண்டும் என்பதற்கான ஐந்து காரணங்களை பார்க்கலாமா?

உதயநிதி ஸ்டாலின்
தமிழக முதலமைச்சரின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆன பிறகு வெளியானத் திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தில் சாதிய வேறுபாடு மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை குறித்த கதைக்களத்தை கொண்டிருந்தது. திரையரங்கில் வெளியானத் இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

கலகத் தலைவன்
நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை முடித்த கையோடு கலகத் தலைவன் படத்தில் உதயநிதி நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர் பார்ப்பை ஏற்படுத்தியது. படம் நாளை திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் முன்பதிவு இரண்டு தினங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு சாதாரண மனிதராக, ஒரு முக்கிய காரணத்திற்காக போராளியாக மாறுகிறார். நடிகருக்கு தீவிரமான அதிரடி காட்சிகளும் உள்ளன.

வெற்றிப்படமாக அமையும்
மகிழ் திருமேனி இயக்கத்தில் தடையறத் தாக்க, மீகாமன், தடம் படங்களை இயக்கி உள்ளார். இதில், 2019ல் வெளிவந்த தடம் படமும் வெற்றிப் படமாக அமைந்தது. உதயநிதி, மகிழ்திருமேனி இருவரும் முதன்முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள கழகத் தலைவன் படத்தில் உதயநிதியின் நடிப்புக்கு பெரிய ஸ்பேஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ் திருமேனி திருப்பங்களுடன் படத்தை கச்சிதமாக உருவாக்கி உள்ளார்.

வில்லனாக மாறியுள்ளார்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹீரோவாகவும், துணை வேடங்களிலும் நடித்து வந்த ஆரவ், 'கலக தலைவன்' படத்தின் மூலம் வில்லனாக மாறியுள்ளார். டிரெய்லரில் ஆக்ஷன் காட்சிகளில் ஆரவின் நடிப்பு மிரட்டலாக உள்ளது. இந்த படம் ஆரவிற்கு நல்ல தொடக்கத்தை தரும். அதேபோல, நிதி அகர்வால் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நீண்ட நாளுக்கு பிறகு நிதி அகர்வாலை திரையில் காண ஆர்வமாக உள்ளார்.


Click it and Unblock the Notifications











