Madharaasi: சிவகார்த்திகேயனின் ‘மதராஸி‘ படத்தை மிஸ் பண்ணாம பார்க்க தூண்டும்.. 5 காரணங்கள் என்னென்ன?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் 'மதராஸி' திரைப்படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது. ருக்மணி வசந்த், பிஜூ மேனன், வித்யூத் ஜம்வால, விக்ராந்த், சபீர் கல்லரக்கல், பிரேம் குமார், தலைவாசல் விஜய், வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நாளை தியேட்டரில் வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தை தியேட்டரில் பார்க்க ஐந்து முக்கிய காரணங்கள் என்ன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் மதராஸி திரைப்படமும் ஒன்றாக உள்ளது. மெகா பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த 'அமரன்' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மதராஸி படமும் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் புதிய பரிமாணம்: 'மதராசி' படத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய தோற்றத்துடன் காணப்படுகிறார். இது அவரது முந்தைய படங்களிலிருந்து வித்தியாசமான பாணியில் இருக்கிறது. அவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு, அதிரடி காட்சிகள் மற்றும் கதாபாத்திரத்தை பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஏ.ஆர். முருகதாஸின் கம்பேக்: 'துப்பாக்கி', 'கத்தி' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்த் திரையுலகிற்கு மதராஸி திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து இருக்கிறார். அவரது கதைகள் எப்போதும் ஒரு சமூகச் செய்தியையும், பரபரப்பான திரைக்கதையையும் கொண்டிருக்கும். 'மதராசி' படத்திலும் அதே பாணியை கொண்டதாக இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
ருக்மிணி வசந்தின் நடிப்பு: விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'ஏஸ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ருக்மிணி வசந்த், 'ஃபர்ஹானா' படத்தின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். அந்த படத்தை தொடர்ந்து தற்போது, 'மதராசி' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ருக்மிணி வசந்த், சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு நடித்துள்ளதால், இவர்களின் ஜோடியை திரையில் பார்க்க அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
அனிருத்தின் இசை: மதராஸி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து பாடல்கள் இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பல பிளாக்பஸ்டர் ஹிட்களைக் கொடுத்த சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் கூட்டணி, 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளதால். இந்தப் படமும் ஒரு பெரிய வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோசமான வில்லன் நடிகர் வித்யுத் ஜம்வால்: 'துப்பாக்கி' பட நடிகர் வித்யுத் ஜம்வால் மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வில்லனாக இந்த படத்தில் களமிறங்கி இருக்கிறார். அவரது அதிரடி காட்சிகள் மற்றும் சிவகார்த்திகேயனுடன் அவர் மோதும் காட்சிகள் 'மதராசி' படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. பிஜு மேனன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 'மதராசி' படத்தின் மூலம் தமிழுக்குத் திரும்பி உள்ளார்.


Click it and Unblock the Notifications











