சீதா ராமம் கொடுத்த ப்ளாக் பஸ்டர்… மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி… விரைவில் ஷூட்டிங்

ஐதராபாத்: துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த ஆகஸ்ட்டில் வெளியானது சீதா ராமம் திரைப்படம்.

ஹனு ராகவபுடி இயக்கத்தில் வெளியான சீதா ராமம் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

திரையரங்குகளைத் தொடர்ந்து அமேசான் ப்ரைமிலும் வெளியான சீதா ராமம் ஓடிடி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ப்ளாக் பஸ்டர் சீதா ராமம்

ப்ளாக் பஸ்டர் சீதா ராமம்

லவ்வர் பாய் துல்கர் சல்மான் நடிப்பில் ஆகஸ்ட் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியான 'சீதா ராமம்' படத்தை ஹனு ராகவபுடி இயக்கியிருந்தார். துல்கர் சல்மான் ஜோடியாக மிருணாள் தாகூரும், முக்கியமான பாத்திரங்களில் ராஷ்மிகா மந்தனா, கெளதம் மேனன் நடித்திருந்தனர். வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் வெளியான சீதா ராமம் படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரிய வரவேற்பு கிடைத்தது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை கடந்து ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பு

ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பு

ராணுவ வீரரான துல்கர் சல்மான், இளவரசியான மிருணாள் தாகூர் இருவரும் காதலிக்கின்றனர். ஆனால், ஒரு ராணுவ சீக்ரெட் ஆப்ரேஷனுக்காக பாகிஸ்தான் செல்லும் துல்கர் சல்மான், அங்கு சிறையில் அடைக்கப்படுகிறார். இறுதியாக இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பது தான் கதை. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே அமேசானிலும் வெளியானது. ஆனாலும், திரையரங்க ரசிகர்களும், ஓடிடி ரசிகர்களும் இந்தப் படத்திற்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி

மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி

சமீபத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அப்படி இருக்கும் போது அதிகம் எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான சீதா ராமம், ட்ரெண்ட் செட்டிங் திரைப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதனால், துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர் ஆகியோரின் மர்க்கெட்டும் செம்ம ஹைப்பில் சென்றன. இந்நிலையில், சீதா ராமம் பட வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஷ்மிகா மந்தனா மட்டும் டவுட்

ராஷ்மிகா மந்தனா மட்டும் டவுட்

புதிதாக உருவாகவுள்ள படத்திலும் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் இருவரும் ஜோடியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல், சீதா ராமம் படத்தை தயாரித்த வைஜெயந்தி மூவிஸ் தான் இந்தப் படத்தையும் தயாரிப்பதாகவும், ஹனு ராகவபுடி இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ராஷ்மிகா மந்தனா மட்டும் நடிப்பதை படக்குழு இன்னும் முடிவு செய்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில், புதிய படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சீக்கிரமே வெளியாகும் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X