கிழக்குச் சீமையிலே விக்னேஷ் ஞாபகமிருக்கா?.. ரெட் ஃபிளவர் படத்தை தொடர்ந்து வரிசையா லைன் அப்!

சென்னை: கிழக்குச் சீமையிலே, பொங்கலோ பொங்கல், பசும்பொன், ராமன் அப்துல்லா, சூரி உள்ள்ட்ட படங்களில் நடித்த நடிகர் விக்னேஷ் பல வருடங்கள் கூலி தேவாவை (ரஜினிகாந்த்) போல ஆஃப் லைனில் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் வெளியான ரெட் ஃபிளவர் படத்தின் மூலம் மீண்டும் ஆன்லைனுக்கு வந்துவிட்டார்.

வந்த வேகத்தில் வரிசையாக இயக்குநர்களிடம் கதைகளை கேட்டு படங்களில் கமிட்டாகி வருகிறார். தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சீனு ராமசாமி விஜய் சேதுபதியை வைத்து பல படங்களை இயக்கி உள்ளார்.

Redflower star Vignesh next join hands with Seenu Ramasamy and Rajanathan

தர்மதுரை, மாமனிதன் படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றன. விஷ்ணு விஷாலை வைத்து நீர்ப்பறவை படத்தை இயக்கிய சீனு ராமசாமி தற்போது விக்னேஷை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். அதே போல கம்பி கட்ன கதை படத்தை இயக்கிய ராஜநாதன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க காத்திருக்கிறார்.

Redflower star Vignesh next join hands with Seenu Ramasamy and Rajanathan

நட்டியை தொடர்ந்து விக்னேஷ்: புதுமுக இயக்குநர் ராஜநாதன் நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள நய்யாண்டி படமான கம்பி கட்ன கதை படத்தை இயக்கி விரைவில் ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார். இந்நிலையில், அடுத்ததாக நடிகர் விக்னேஷை வைத்தும் ஒரு வித்தியாசமான படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Redflower star Vignesh next join hands with Seenu Ramasamy and Rajanathan

பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை: இளமை துள்ளலுடன் கவர்ச்சி போட்டோக்களை களமிறக்கி இன்ஸ்டாகிராமின் ஹாட் குயினாக உள்ள நடிகையை தான் விக்னேஷ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். கூடிய விரைவிலேயே படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X