Don't Miss!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: மோடி அரசின் 7 முன்னுரிமைகள் - நிர்மலா சீதாராமன்
- News
சபாஷ்.. விவசாயக் கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்த மாதிரி வதந்தியையெல்லாம் யார் தான் பரப்புறாங்க.. தலைவர் 169 படம் குறித்து பேசிய காமெடி நடிகர்!
சென்னை : நடிகர் ரெடின் கிங்ஸ்லி கோலிவுட்டின் மிகவும் பிசியான காமெடி நடிகராக மாறியுள்ளார்.
அடுத்தடுத்து டாக்டர், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் அவரை பார்க்க முடிந்தது.
இந்நிலையில் தன்னுடைய நெருங்கிய நண்பரான நெல்சன் திலீப்குமார் குறித்து அவர் தற்போது பேசியுள்ளார்.
ரஜினி
எதிர்பார்ப்பது
வேற...தலைவர்
169
ஷுட்டிங்
தாமதத்திற்கு
இது
தான்
காரணமா?

இயக்குநர் நெல்சன் திலீப்குமார்
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் வெற்றிகளை தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார். இந்தப் படம் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறிய நிலையில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆயினும் வசூலில் சிறப்பாக காணப்பட்டது. தொடர்ந்து 50 நாட்களை தாண்டி திரையரங்குகளில் ஓடி வருகிறது. ஒடிடியிலும் படம் ரிலீசாகியுள்ளது.

தலைவர் 169 படத்தை இயக்கும் நெல்சன்
இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் ரஜினியின் நடிப்பில் உருவாகவுள்ள தலைவர் 169 படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். பீஸ்ட் ரிலீசுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து ரஜினி ரசிகர்களும் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

ரஜினியை இயக்கும் நெல்சன்
பீஸ்ட் படத்தின் சொதப்பலான திரைக்கதையை தொடர்ந்து அந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து நெல்சன் சூப்பர்ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு தொடருமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவர் ரஜினியை இயக்குவது உறுதியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

திரைக்கதையை எழுதும் நெல்சன்
இதனிடையே நெல்சன் திலீப்குமாரின் நெருங்கிய நண்பரான ரெடின் கிங்ஸ்லி இந்தப் படம் குறித்தும் நெல்சன் குறித்தும் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். தலைவர் 169 படத்தின் விவாதங்கள் முடிந்து தற்போது படத்திற்கான திரைக்கதையை அவர் எழுதி வருவதாக ரெடின் கிங்ஸ்லி தெரிவித்துள்ளார்.

தலைவர் 169 படத்தில் கேஎஸ் ரவிக்குமார்?
பீஸ்ட் படத்தின் திரைக்கதையில் நெல்சன் சொதப்பியதால் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தலைவர் 169 படத்தின் திரைக்கதையை எழுதுவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த விஷயத்தை ரெடின் மறுத்துள்ளார். இதில் எந்த அளவிலும் உண்மை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

யார்தான் பரப்புகிறார்கள்?
இதுபோன்ற தகவல்களை யார் பரப்புகிறார்கள் என்பது குறித்து தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நெல்சன் மிகவும் தீவிரமாக உள்ளதாகவும் ரஜினி படத்தில் அவர் கண்டிப்பாக அனைவரையும் கவர்வார் என்றும் ரெடின் மேலும் தெரிவித்துள்ளார். இந்தப் படத்திலும் ரெடின் இடம்பெறுவார் என்று நம்பலாம்.
தொடர்ந்து அவரிடம் ஹீரோவாக நடிப்பாரா என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், எதற்கு ஹீரோவாக நடிக்க வேண்டும், காமெடியனாக நல்லாத் தானே போய்க் கொண்டிருக்கிறது என்று பதில் கேள்வி கேட்டார். காமெடி நடிகர்கள் அடுத்தடுத்து ஹீரோவாக மாறிவரும் நிலையில் ரெடின் இவ்வாறு கூறியுள்ளார்.